வியாழன் 27, ஜூன் 2019  
img
img

திருமணத்துக்கு சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரியால் பறிபோன 21 உயிர்
புதன் 18 ஏப்ரல் 2018 13:51:18

img

மத்தியப்பிரதேசத்தில், மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில், திருமணத்துக்குச் சென்றுவிட்டு  மினி லாரி ஒன்றில் சுமார் 50 பேர் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். லாரி, பாலத்தின்மீது சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, எதிர்பாராத விதமாக சோன் ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 21 பேர் பலி யாகினர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. படுகாயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் அனு மதிக்க ப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள்குறித்து மாவட்ட ஆட்சியர் திலீப் குமார் நேரில் ஆய்வு செய்தார். மேலும், மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் கவுகான், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
img
தமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்!

12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக

மேலும்
img
நாடாளுமன்றத்தில் தூங்கிய அமித்ஷா! வைரலாகும் போட்டோ!

கடந்த 9 ஜனவரி 2019 குளிர்காலக் கூட்டத் தொடரின் போது

மேலும்
img
ராகுல் காந்தி வீட்டின் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து

மேலும்
img
இனி வெட்டியது பற்றி கேள்வி எழுப்புகிறவனை வெட்டுவோம்'

பாமக பெரும் பின்னடைவை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img