வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

அமெரிக்காவில் மாயம் ஆன இந்திய குடும்பத்தினரின் உடல்கள் மீட்பு
செவ்வாய் 17 ஏப்ரல் 2018 13:32:00

img
வாஷிங்டன்,
 
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், வேலன்சியா நகரில் வசித்து வந்த இந்தியரான சந்தீப் (வயது 42) என்பவர், தனது மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோருடன் காரில் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்கள் வழியில் மாயம் ஆனார்கள்.
 
6-ந் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதில், சந்தீப்பின் காரைப் போன்ற ஒரு கார் அங்கு ஹம்போல்ட் நகருக்கு அருகே கார்பர் வில்லே என்ற இடத்தில் வெள்ளம் கரை புரண்டோடுகிற ஏல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிய வந்தது. அதைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
 
நேற்று சந்தீப்பின் மகன் சித்தாந்த் உடல் மீட்கப்பட்ட நிலையில், இன்று காலை 4 மணியளவில் ஏல் நதியிலிருந்து வடக்கே 6 மைல் தொலைவில் சந்தீப் தனது குடும்பத்தினருடன் சென்ற கார் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காரில் இருந்த சந்தீப் மற்றும் அவரது மகள் சாச்சி உடல்கள் மீட்கப்பட்டன. 
 
முன்னதாக கடந்த 13-ந் தேதி கலிபோர்னியாவை சேர்ந்த மீட்பு படையினர் சவுமியாவின் உடலை, ஏல் நதியில் கார் அடித்துச்செல்லப்பட்ட இடத்தில் இருந்து 7 மைல்கள் வடக்கே கைப்பற்றினர். மேலும் சந்தீப் குடும்பத்தினருக்கு சொந்தமான பொருட்கள், காரின் பல பாகங்களும் மீட்கப்பட்டு உள்ளன. இவை சந்தீப் குடும்ப உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டு சந்தீப் குடும்பத்தினருடையதுதான் என போலீசார்  உறுதி செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து இந்த வாரத்திற்குள் விசாரணையின் ஒரு பகுதியாக பிரேத பரிசோதணை நடைபெறும் என தகவல் வெளிவந்துள்ளது. 
பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img