திங்கள் 22, அக்டோபர் 2018  
img
img

காவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை: சீமான் விளக்கம்
சனி 14 ஏப்ரல் 2018 17:27:48

img
சென்னை,
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:- காவலர்களைத் தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் இல்லை. காவலர்களைத் தாக்கியது தவறு; போராடுபவர்களை காவலர்கள் தாக்குவதும் தவறு.தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர். 
 
நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல; போலீசாரை தாக்குவதற்குத்தான் நாங்கள் கட்சி நடத்திக் கொண்டுருக்கிறோமா?. காவிரிக்காக ஐபிஎல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினோம். போராட்டத்தில் திடீர் தாக்குதல் ஏற்பட்ட போது, நான் தாக்கியதாக திட்டமிட்டு கொலை முயற்சி செய்கிறோம் என்ற பொய் வழக்கு போடப்பட்டது.
 
யார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதை காவல்துறை தான் கண்டறிந்து நடவடிக்கை  வேண்டும்.  ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை.  நாம் தமிழர் கட்சியினரை போலீசார் மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்  நாம் தமிழர் கட்சியினரை குற்றவாளிகளாக்குவது தவறானது. போராட்டத்தின் போது போலீசை தாக்கியது யார் என்றே தெரியவில்லை. 
 
காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொண்டர்களை கைது செயய்வேண்டாம் என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள். காவல்துறைக்கு எதிரான கட்சி போல, நாம் தமிழர் கட்சி மீது குற்றம்சாட்டுவது தவறு. ஐபிஎல் போட்டியின்போது, ரசிகர்கள் மற்றும் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறானது” இவ்வாறு அவர் தெரிவித்தார். 
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ - தமிழக அரசு மேல்முறையீடு

கடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகை

மேலும்
img
தமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்

வரும் 14-ம் தேதி வரை நடக்கும்

மேலும்
img
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!!

திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்தி

மேலும்
img
ப.சிதம்பரத்தின் கோடிக்கணக்கிலான சொத்துக்கள் முடக்கம்

லண்டனில் இருக்கும் வீடுகள்,

மேலும்
img
ஆதாரங்கள் இருந்தும் ஊழல்கள் விசாரிக்கப்படுவதில்லை- ராமதாஸ் குற்றச்சாட்டு

ரூ.33 கோடி இழப்பு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img