வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

நலன் குமாரசாமி இயக்கத்தில் ப்ரியா வாரியர்
வெள்ளி 13 ஏப்ரல் 2018 17:21:07

img
ஒரு ஆடார் லவ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் ப்ரியா வாரியரின் அடுத்த படம் குறித்து பல தகவல்கள் உலா வரும் நிலையில், ப்ரியா அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஒரு ஆடார் லவ் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் ப்ரியா வாரியர். இந்த படத்தில் இருந்து வெளியான மாணிக்க மலராய பூவே பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் ப்ரியா வாரியரை தங்களது படத்தில் நடிக்க வைக்க பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 
 
அதேபோல் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் கே.வி.ஆனந்தும், ப்ரியா வாரியரை தனது படத்தில் நாயகியாக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், கே.வி.ஆனந்த் அதனை மறுத்தார். அதேபோல் ரன்வீர் சிங் படமொன்றில் நடிக்கவும் ப்ரியா வாரியருக்கு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ப்ரியா வாரியர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img