திங்கள் 23, ஏப்ரல் 2018  
img
img

சென்னையிலிருந்து மாற்றப்பட்ட ஐபிஎல் போட்டியை புனேவில் நடத்துவதிலும் சிக்கல்
வெள்ளி 13 ஏப்ரல் 2018 16:19:18

img
மும்பை
 
சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் ஐ.பி.எல். போட்டிகளை அனுமதிக்கமாட்டோம் என போராட்டம் நடைபெற்றது.  போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதற்கிடையே சென்னையில் மேற்கொண்டு 6 போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை போலீசாரும் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தனர். 
 
சென்னையில் நடைபெற உள்ள போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றம் முடிவு செய்யப்பட்டது.இந்த நிலையில்  ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நடக்கவிருந்த 6 போட்டிகளுக்கான டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஏப். 14ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.ஆனால் தற்போது புனேவிலும் சென்னை ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது
 
தண்ணீர் பற்றாக்குறை உள்ள புனேவில் கிரிக்கெட் மைதானத்துக்கு தண்ணீர் எப்படி வழங்க முடியும் என  மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பின்செல்

உலகச் செய்திகள்

img
வர்த்தக போருக்கு அமெரிக்கா வலியுறுத்தினால் சீனா தக்க பதிலடி கொடுக்கும் : சீன தூதர்

இருதரப்பிலும் மேற்கொள்ளபடும் வரிவிதிப்பு

மேலும்
img
நான் 2 குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் எனக்கு பாலியல் தொல்லை: பிரபல பாடகி புகார்

அதிலும் குறிப்பாக பாலியல் தொல்லை

மேலும்
img
அமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும்

மேலும்
img
முன்னாள் அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்-ஷின் மனைவி காலமானார்..!

பார்பரா புஷ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த

மேலும்
img
அமெரிக்காவில் மாயம் ஆன இந்திய குடும்பத்தினரின் உடல்கள் மீட்பு

சந்தீப்பின் மகன் சித்தாந்த் உடல் மீட்கப்பட்ட

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img