திங்கள் 22, அக்டோபர் 2018  
img
img

சிரியா மீது ராணுவ நடவடிக்கையா? டிரம்ப் முடிவு எடுக்க முடியாமல் திணறல்
வெள்ளி 13 ஏப்ரல் 2018 16:17:29

img
வாஷிங்டன்,
 
சிரியாவில் கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் கடந்த 7-ந் தேதி ரசாயன ஆயுத தாக்குதல் நடைபெற்றது. இதில் சிக்கி குழந்தைகள் உள்பட 60 பேர் கொன்று குவிக்கப்பட்டது உலக அரங்கை உலுக்குவதாக அமைந்தது.இந்த தாக்குதலுக்கு சிரியாவின் அதிபர் பஷார் ஆல் ஆசாத்தும், அவரை ஆதரித்து வருகிற ரஷியாவும்தான் பொறுப்பு என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அது மட்டுமின்றி இந்த தாக்குதலை நடத்தியதற்காக சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
 
ஆனால் சிரியா விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு எடுக்க முடியாமல் திணறுவது அம்பலத்துக்கு வந்து உள்ளது.இது தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “சிரியா விவகாரத்தில் வாய்ப்பு உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் குறித்து டிரம்ப் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார். அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை” என்று கூறினார்.
 
மேலும் அவர் கூறும்போது, “சிரியா பிரச்சினையில் பொதுவாக ஜனாதிபதி டிரம்ப் ஒரு முடிவு எடுத்திருக்கிறார். லத்தீன் அமெரிக்கா பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டார். அதன் நோக்கம், இந்த விவகாரத்தில் கவனத்தை செலுத்துவதுதான். சிரியா மீதான நடவடிக்கையில் பல்வேறு வாய்ப்புகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்” என குறிப்பிட்டார்.
பின்செல்

உலகச் செய்திகள்

img
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?

சமீப காலமாக பேஸ்புக் நிறுவனம் கடும்

மேலும்
img
பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும் 

சவூதி மன்னர் சல்மானின் முடியாட்சியை

மேலும்
img
கடத்தப்பட்ட 700 பேரில் நாள் ஒன்றுக்கு 10 பேரை கொல்லப்போகிறோம்

தீவிரவாதிகள் மிரட்டல்

மேலும்
img
பிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை 

சுரங்க நிறுவனம் இந்த சோதனையை

மேலும்
img
விலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு

பே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img