செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்தால், தமிழக வாகனங்களை கர்நாடகாவில் தடுப்போம்
வியாழன் 12 ஏப்ரல் 2018 14:07:35

img

பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றால் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளன. இந்த நிலையில், கன்னட அமைப்பான கன்னட சலுவளி வாட்டாள் என்ற கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இன்று பெங்களூரில் போராட்டம் நடத்தினார். தமிழகத்தில் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக நிருபர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது: ஏப்ரல் 16ம் தேதிக்குள் தமிழகத்தில் காவிரி தொடர்பான போராட்டங்களை நிறுத்த வேண்டும். ஏப்ரல் 16க்கு பிறகும் போராட்டம் தொடர்ந்தால் 16ம் தேதிக்கு பிறகு, தமிழக வாகனங்களை கர்நாடகாவில் தடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நடிகர்கள், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் காவிரி விஷயத்தில் கர்நாடகாவிற்கு எதிராக கருத்து கூறியுள்ளதால் அவர்கள் படங்களை கர்நாடகாவில், வெளியிட அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இப்போது தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்துவதாக கூறியுள்ளார். இதனால், கர்நாடக வாழ் தமிழர்களிடையே பரபரப்பு சூழல் நிலவுகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img