செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

ஏமனில் சவூதி தலைமையிலான வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி
செவ்வாய் 10 ஏப்ரல் 2018 13:20:12

img

சனா,

ஏமனில் தென்மேற்கு நகரான டாயிஜ் மற்றும் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள வடக்கு நகரான சாடா ஆகியவை மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன.

சவூதி ஆதரவு பெற்ற அரசு படைகள் மற்றும் ஈரான் நாட்டுடன் கூட்டணியாக உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் இடையே டாயிஜ் நகரின் திம்னத் காதிர் மாவட்டத்தில் கடும் சண்டை நடந்து வருகிறது.இந்த நிலையில், சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள் இப்பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று சாடா நகரில் பணிமனை ஒன்றின் மீது நடந்த மற்றொரு வான்தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.  8 பேர் காயமடைந்து உள்ள னர்.  இதில் பள்ளி மாணவிகளும் அடங்குவர்.இந்த தகவலை கிளர்ச்சியாளர்களுக்கான மனித உரிமைகள் துறை மந்திரி அல் ஷாபி தெரிவித்து ள்ளார். பொதுமக்கள் மற்றும் ஆயுதமற்ற ஏமன்வாசிகள் மீது படுகொலைகள் நடத்தப்படுகின்றன.  இதுபற்றி விசாரணை நடத்த தனி ஆணையம் அமை க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

ஏமனில் பல வருட போரில் 10 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர்.  உலகில் குடிமக்களுக்கு பாதுகாப்பற்ற மோசமிக்க நாடாக ஏமன் உள்ளது.  அந்நாட்டில் 2.22 கோடி பேர் வரை உதவியற்ற நிலையில் உள்ளனர்.  காலரா போன்ற பிற நோய்களால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்

ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட

மேலும்
img
ஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு

தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான

மேலும்
img
அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி 

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்

மேலும்
img
245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது 

அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்

மேலும்
img
வர்த்தகப் போர் எதிரொலி! அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு

கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img