img
img

டெல்லி விமானநிலையத்தைப் பதறவைத்த ஜெட் ஏர்வேஸ்..! பெரும் விபத்து தவிர்ப்பு
திங்கள் 09 ஏப்ரல் 2018 12:40:22

img

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தால் ஏற்பட இருந்த இரு பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டன. 

டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் வழக்கமான பரபரப்புடன் நேற்றிரவு இயங்கிக்கொண்டிருந்தது. விமான ஓடுதளம் அருகே கேட்டரிங் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், துபாயிலிருந்து 133 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கிக்கொண்டிருந்தது. விமானத்தை ஓடுதளத்தில் நிறுத்தும்போது, அதன் இறக்கை அருகில் இருந்த கேட்டரிங் வாகனத்தில் மோதியது. இதில், கேட்டரிங் வாகனம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் உயிர் தப்பினர். 

முன்னதாக, கடந்த வருடம் இதேபோல ஒரு சம்பவம் நடந்ததில் அதிர்ஷ்டவசமாக 77 பயணிகள் உயிர் தப்பினர். இதேபோல, மாலை 6 மணியளவில், உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து டெல்லி வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் லேண்டிங் கியர் பழுதானால், விபத்து ஏற்பட நேர்ந்தது. இருப்பினும் விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த இரு வேறு சம்பவங்களால் டெல்லி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
பாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.

இந்நிலையில் மாயாவதியின் கட்சியில்

மேலும்
img
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.

நேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு

மேலும்
img
18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்

18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த

மேலும்
img
எந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.? அழைப்புவிடுக்கும் கட்சிகள்!

அ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன

மேலும்
img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img