புதன் 21, நவம்பர் 2018  
img
img

கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகத்துக்கு எதிராகக் கடல் முற்றுகைப் போராட்டம்!
சனி 07 ஏப்ரல் 2018 13:38:17

img

கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழ மணக்குடி முதல் கோவளம் வரை உள்ள பகுதியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. வர்த்தகத் துறைமுகத்தால் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாகக் கோவளம் பகுதியில் மீனவர்கள் இன்று கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான படகுகளில் கறுப்புக்கொடிகளைக் கட்டியபடி மீனவர்கள் கோவளம் கடற்கரை பகுதியில் திரண்டுள்ளனர். மேலும், மீனவர்கள் கடற்கரை மணற்பரப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் மீனவர்கள் மீன்பிடிக்கப்போகாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் .இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 போராட்டம்துறைமுக எதிர்ப்பாளர்கள் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், பா.ஜ.க-வினர் துறைமுகத்துக்கு ஆதரவாக இன்று பந்த் போராட்டம் அறிவித்திருந்தனர். இதனால் துறைமுக எதிர்ப்புப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img