வியாழன் 27, ஜூன் 2019  
img
img

பந்தலுக்கு முன்னால் உண்ணாவிரதம்; பின்னால் சாப்பாடு' - அ.தி.மு.க-வை கிண்டலடித்த பிரேமலதா
சனி 07 ஏப்ரல் 2018 13:35:45

img

லைஃப்பே இல்லைனு விவசாயிகள் போராடும்போது, வைஃபை திட்டத்தைத் தொடங்கிவைக்கிறது தமிழக அரசு'' எனப் பிரேமலதா  விஜயகாந்த் பேசியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் தே.மு.தி.க சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, விஜயகாந்த் பச்சை சட்டை அணிந்துவந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். முதலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா, தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தே.மு.தி.க-தான் முதன்முதலில் குரல்கொடுக்கும் கட்சியாக உள்ளது. 5 முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. ஆனால், திருவாரூர் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. நாங்கள் விவசாயிகள் குடும்பம். ஊருக்கே ராஜா வாக இருந்தாலும் அவருக்குத் தட்டில் சோறு கிடைக்கப் பாடுபடும் முதலாளிகள்தான் விவசாயிகள். விவசாயி நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்.

பா.ஜ.க-வுக்கு கர்நாடகம் மட்டுமன்றி இந்தியா முழுமையும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஸ்கீம் என்ற ஒரு வார்த்தையைக் காட்டி, தமிழக மக்களின் தண்ணீர்ப் பிரச்னையை மத்திய அரசு தவிர்த்துவருகிறது. இதுபோன்று, மக்களுக்குப் புரியாத வார்த்தையைச் சொல்லி விவசாயிகளை ஏமாற்றும் மத்திய அரசைக் கண்டிக்கின்றோம். இதற்கு முன்னர் கிரிமிலேயர், டிமானிடைசேஷன்  என்ற ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லி, மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கிறது. தே.மு.தி.க நீதித்துறையின் மீதும் காவல்துறையின் மீதும் மரியாதை வைத்துள்ள கட்சி. வரும் 9-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ள வழக்கு விசாரணையில், தீபக் மிஸ்ரா நிச்சயமாக நியாயத்தைத் தருவார் என்று நம்புகிறோம்.  

தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. காவிரிப் பிரச்னை, மீனவர் பிரச்னை, ஸ்டெர்லைட், நியூட்ரினோ எனத் தமிழகம் போராட்டக்களமாக மாறி விட்டது. இதற்குக் காரணம்,  தமிழகத்தை ஆண்ட கட்சிகளும் ஆளும் கட்சிகளும்தான். ஆனால், இதை மறைத்துவிட்டு போலித்தனமான போராட்ட ங்களை நடத்திவருகின்றனர். இன்று, தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் வைஃபை திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். லைஃப்பே இல்லாமல் போகிறதே என விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் போராடிவரும் நிலையில், வைஃபை திட்டத்தைத் தொடங்கிவைக்கிறது எடப்பாடி அரசு.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டம் போட்டனர். அனைத்துக் கட்சிகளும் கூட்டத்துக்கு வந்தோம். ஆனால், இன்று என்ன நிலைமை? டெல்லி பாராளுமன்றம் முன்பு அ.தி.மு.க எம்.பி-க்கள் ஷோகேஸ் பொம்மைகள் போல நின்றுகொண்டு போராட்டம் நடத்து வதாகச் சொல்கின்றனர். உண்ணாவிரதம் என்று சொல்லி முட்டாளாக்குகின்றனர். உண்ணாவிரதம் இருந்து, உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்னால் நின்று சாப்பிடுகின்றனர். இதற்கு வெட்கப்பட வேண்டும். ஒருநாள் உண்ணாவிரதம் என அறிவித்துவிட்டு சாப்பாடு முக்கியமாகப்போய்விட்டது.

காவிரிப் பிரச்னை உட்பட  அனைத்துக்கும் உச்ச நீதிமன்றம் நமக்குச் சரியான தீர்ப்பு கொடுக்கும் என்று நம்புகின்றோம். எத்தனையோ பிரச்னைகள் தமி ழகத்துக்கு உள்ளன. இதற்கெல்லாம் ஒரே தீர்வு, ராணுவ ஆட்சியில்தான் கிடைக்கும். அரபு நாடுகளைப் பாருங்கள் இந்தியாவுக்கு ஏன் ராணுவ ஆட்சி வரக் கூடாது. மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது அதை அடித்துதான் பிடுங்க வேண்டும். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மூன்றாவதாக ஒரு கட்சி வந்துவிடக் கூடாது என்று கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றன. கமிஷனில் கரப்ஷனில் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் கூட்டணிபோட்டு ஆட்சி நடத்துகின்றன. பஸ் கட்டண உயர்வு செய்ததில் கோடிக் கணக்கில் கமிஷன் கைமாறியுள்ளது. இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் யார் இலவசம், பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப்போடும் நிலையிலிருந்து மக்கள் மனநிலை மாற வேண்டும். ரூ.10 ஆயிரம் கோடி இருந்தாலே நதிகள் இணைப்பு சாத்தியம்" என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
img
தமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்!

12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக

மேலும்
img
நாடாளுமன்றத்தில் தூங்கிய அமித்ஷா! வைரலாகும் போட்டோ!

கடந்த 9 ஜனவரி 2019 குளிர்காலக் கூட்டத் தொடரின் போது

மேலும்
img
ராகுல் காந்தி வீட்டின் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து

மேலும்
img
இனி வெட்டியது பற்றி கேள்வி எழுப்புகிறவனை வெட்டுவோம்'

பாமக பெரும் பின்னடைவை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img