செவ்வாய் 26, மார்ச் 2019  
img
img

ஐ.பி.எல். கோப்பையை வெல்வதே இலக்கு - விராட் கோலி
வியாழன் 05 ஏப்ரல் 2018 14:15:08

img

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த அணி இதுவரை மூன்று முறை (2009, 2011, 2016) இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆனால் 3 முறையும் தோல்வியையே சந்தித்தது. இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்று வேட்கையுடன் இருக்கிறது. இதுகுறித்து விராட் கோலி கூறியதாவது:-

பெங்களூர் அணியில் 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். 3 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும் கோப்பையை வெல்லவில்லை. பெங்களூர் ரசிகர்களைவிட கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேட்கையுடன் இருக்கிறேன். 100 சதவீதம் எனது பங்களிப்பை அளிப்பேன் என்று உறுதியாக கூறுகிறேன்.

கடந்த காலங்களில் பெங்களூர் அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருப்பதை பார்த்து வருகிறோம். இந்த முறை ஏலத்தில் பந்துவீச்சிலும் பலம் வாய்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதனால் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
குண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம்

குண்டு எறிதல் பிரிவில்

மேலும்
img
பனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி

4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன்

மேலும்
img
தாய்லாந்து மாஸ்டர் ஓட்டப்போட்டியில் 15 தங்கப்பதக்கங்கள் வெல்ல மலேசியா இலக்கு.

24ஆவது அனைத்துலகப் போட்டியில் 15

மேலும்
img
வரலாறு படைத்தார் பி.வி.சிந்து. உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண்.

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

மேலும்
img
சுக்மா திடல் தடப் போட்டியில் பூவசந்தன், கீர்த்தனா சாதனை.

பூவசந்தன் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியிலும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img