ஞாயிறு 20, ஜனவரி 2019  
img
img

`என்னை அடிப்பதுபோல அடி... நான் அழுவதுபோல அழுகிறேன்'
புதன் 04 ஏப்ரல் 2018 12:40:48

img

”மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டம் ஏதும் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது என கூறி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?’’ என பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பட்டத்தில் பேசிய சுப.உதயகுமார், ”தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை நிலம், நிலத்தடி நீர் மற்றும் காற்று என அனைத்திலும் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆலைக்கு எதிரான குமரெட்டியாபுரம் என்ற ஒரு கிராம மக்களின் போராட்டம், இன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆலைக்கு  எதிராக அவர்கள் இருக்கும் இடத்திலேயே கோஷம் எழுப்பி எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். 

இந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் எந்த அளவுக்குப் பாதிப்புகளை அடைந்திருப்பார்கள் என்பது அவர்களின் போராட்டக் குரலில் எதிரொலிக்கும் அனல் கோஷத்தில் தெரிகிறது. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் இந்த அரசு நிறைவேற்றாது என முதல்வர் கூறிவருகிறார். இந்த ஆலை செயல்படுவதே தீங்கு எனவும் இதை மூடிட வலியுறுத்தியும்தான் அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், அப்போது இதை மட்டும் ஏன் அரசு ஏற்க மறுக்கிறது? இந்த ஆலையால் இன்று பாதிப்பு அவர்களுக்கு.., நாளை நமக்கானது என நினைத்து அனைவரும் இணைந்து எந்தச் சோதனையிலும் ஒற்றுமை கலையாமல் இந்த ஆலைக்கு எதிராகப் போராட வேண்டும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் மட்டுமல்ல, நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், கூடங்குளம் அணு உலை, கல்பாக்கம் அணு உலை, கெயில் குழாய் எதிர்ப்பு என தமிழகம் முழுவதுமே போராட்டக் களமாகத்தான் காட்சி அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதத்தை நடத்தி முடித்துள்ளனர். ’என்னை அடிப்பது போல அடி.. நான் அழுவது போல அழுகிறேன்’ என டெல்லியில் பா.ஜ.க-வும் தமிழகத்தில் அ.தி.மு.க-வும் சேர்ந்து மக்களுக்கு நடப்பது எதுவுமே தெரியாது என நினைத்துக்கொண்டு நாடகம் ஆடி வருகிறார்கள். மத்திய அரசு காவிரி விவகாரத்தில்  உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்பது போல கால விரயம் செய்து வருகிறது'' என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img