செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

வீட்டுச் சிறையில் அடைபட்டிருக்கிறாரா சசிகலா?!' - தினகரன் மீது பாயும் சசிகலா ஆதரவாளர்கள்
வெள்ளி 30 மார்ச் 2018 13:09:05

img

பரோல் காலம் முடிவதற்கு முன்னரே, நாளை பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் செல்ல இருக்கிறார் சசிகலா. ' பரோல் காலத்தில் சசிகலாவிடம் யாரும் பேசிவிடக் கூடாது என்பதில் தினகரன் தெளிவாக இருக்கிறார். மொத்தத்தில் அருளானந்தம் நகரில் உள்ள வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் சசிகலா' என்கின்றனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சீனியர் நிர்வாகிகள். 

 
அதற்கு முன்னதாக பெங்களூரு சிறைக்குச் செல்ல இருக்கிறார். " கடந்த பத்து நாள்களாக சசிகலாவைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் உறவினர்களும் கட்சித் தொண்டர்களும். சசிகலா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் தங்க.தமிழ்ச்செல்வனுக்கே, அவரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. நடராசனின் மறைவுக்காக, சசிகலாவுக்கு ஆறுதல் சொல்ல வரும் அரசியல் கட்சிப் பிரமுகர்களை தினகரன்தான் வாசலுக்குச் சென்று அழைத்து வருகிறார். அவர்கள் பேசிவிட்டுச் செல்லும் வரையில் சசிகலா பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறார். 'தன்னை மீறி யாரும் சசிகலாவிடம் நெருங்கிவிடக் கூடாது' என்பதில் தெளிவாக இருக்கிறார். அவருடைய செயல்பாடுகளைப் பார்த்து கட்சிக்காரர்கள் அனைவரும் கொதிப்பில் உள்ளனர்" என விவரித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் டெல்டா மாவட்ட பிரதிநிதி ஒருவர், 

" பரோல் காலம் தொடங்கியதில் இருந்து சசிகலாவைவிட்டு தினகரன் நகரவில்லை. தன்னைச் சந்திக்க வருகிறவர்களுக்காக காலை ஒன்பது மணிக்குத் தயாராகிவிடுவார் சசிகலா. அதன்பிறகு யாரெல்லாம் சந்திக்க வருகிறார்கள் என்பதை தினகரன் கூறுவார். எதாவது அரசியல் பணி காரணமாக அவர் வெளியில் சென்றுவிட்டால், மனைவி அனுராதாவை சசிகலா அருகிலேயே இருக்கச் சொல்லிவிட்டுச் செல்கிறார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் நடராசன் அனுமதிக்கப்பட்ட காலத்தில், பரோல் விடுப்பில் வெளியில் வந்தார் சசிகலா. அப்போது தி.நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்து ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார் சசிகலா.

அப்போதுகூட, கிருஷ்ணபிரியா நினைத்தால்தான் சசிகலாவைச் சந்திக்க முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது தினகரன் மனது வைத்தால் மட்டுமே உறவுகள் சந்திக்கக் கூடிய நிலை உருவாகிவிட்டது. 'யார் இந்த நடராசன்? அவர் பேச்சையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை' எனக் கூறிய தினகரன், இப்போது அவரது மரணத்துக்காக தாடி வளர்த்துக் கொண்டிருப்பதை உறவினர்கள் யாரும் ரசிக்கவில்லை. 

நேற்று சசிகலாவைச் சந்திக்க சீமான் வந்திருந்தார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், தினகரன் அருகிலேயேதான் இருந்தார். தனிப்பட்ட முறையில் சசிகலாவிடம் பேசுவதற்கு யாருக்கும் அனுமதி தரப்படுவதில்லை. இந்த பத்து நாள்களில் திவாகரனே அரை மணி நேரம், முக்கால் மணி நேரம் என்ற அளவில்தான் சசிகலாவிடம் பேச முடிந்தது. அவருடைய மகன் ஜெயானந்தும் இரண்டு முறைதான் சசிகலாவை சந்திக்க வந்தார். இத்தனைக்கும் சசிகலாவின் சொந்த தம்பி அவர்.

பரோல் காலம் முடிவதற்கு முன்பாக, சசிகலா சிறை செல்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ' பரோல் விடுப்புக்கு முன்னதாக சிறைக்குச் சென்றால், சிறைத்துறையின் நன்னடத்தை சான்று கிடைக்கும்' என்பதைப் பிரதான காரணமாகக் கூறினாலும், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கிறார் சசிகலா. நடராசன் குடும்பத்தினரின் சொத்து பஞ்சாயத்து, தினகரனின் தனி ஆவர்த்தனம் எனப் பலமுனைத் தாக்குதலில் சிக்கியிருக்கிறார். 

குறிப்பாக, சசிகலா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் தங்க.தமிழ்ச்செல்வனை அருகில் நெருங்கவிடாமல் வைத்திருக்கிறார் தினகரன். ' சின்னம்மாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன்' என்றுதான் பேசி வருகிறார் தங்க.தமிழ்ச்செல்வன். 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி நடந்த உண்ணாவிரதத்தில் சில காட்சிகள் நடந்தன.

'தங்க.தமிழ்ச்செல்வன் பேச வேண்டாம்' என தினகரன் கூறியதை, செந்தில் பாலாஜி அவரிடம் கூறியிருக்கிறார். இதனால் கொந்தளித்த தங்க. தமிழ்ச்செல்வன், ' நான் ஏன் பேசக் கூடாது?' எனக் கோபப்பட்டு மேடையேறிப் பேசினார். அந்தப் பேச்சில், ' தியாகத் தலைவி சின்னம்மாவின் முயற்சி யால்தான் இந்த உண்ணாவிரதம் நடக்கிறது' எனத் தொடர்ந்து பலமுறை சசிகலா பெயரை உச்சரித்தார். இதனை தினகரன் ரசிக்கவில்லை. பரோல் காலம் முடிவதற்கு முன்னரே, சசிகலா சிறைக்குச் செல்வதைப் பற்றி தினகரன் எந்தக் கவலையும் அடையவில்லை. ' இன்னும் 5 நாள்கள் இருந்து விட்டுப் போங்கள்' என பெயரளவுக்குக்கூட அவர் கூறவில்லை. மொத்தத்தில், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சசிகலா" என்றார் விரிவாக. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img