திங்கள் 18, மார்ச் 2019  
img
img

தலிபான் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் திரும்பினார் மலாலா!
வியாழன் 29 மார்ச் 2018 13:41:49

img

தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் பிழைத்து வெளிநாட்டில் வாழ்ந்துவந்த மலாலா நேற்று முதல்முறையாக பாகிஸ்தான் திரும்பினார்.

பாகிஸ்தானில் ஸ்வாட் மாவட்டத்தில் பிறந்த மலாலா தனது 12 வயதில், பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்வியை எதிர்க்கும் தலிபான்கள் பற்றி பிபிசி உருதில் கட்டுரை எழுதத் தொடங்கினார். தீவிரவாதிகளின் அடக்குமுறையில் பெண் கல்வி எப்படி உள்ளது என்பதைப் பற்றி பேசிவந்தார். இதனால் தலிபான்கள் மலாலாவை துப்பாக்கியால் தலையில் சுட்டனர். மேற்கத்திய கலாசாரத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அவரைத் தாக்கியதாக தலி பான்கள் கூறினர். இதனையடுத்து அவர் வெளிநாட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தார்.

இதனைத்தொடர்ந்து தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக நேற்று பாகிஸ்தான் வந்தார் மலாலா. இவர் அங்கு நான்கு நாள்கள் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பாகிஸ்தான் வருவதை ரகசியமாக வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் பாகிஸ்தான் பிரதமரை நேரில் சென்று சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2014 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு அறிவிக்கப்பட்டது. பெண் குழந்தைகளின் உரிமைக்காகப் போராடியதால் இவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது. மிகச் சிறு வயதில் நோபல் பரிசு மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெறும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையைப் பெற்றார் மலாலா. கடந்த ஆண்டு அவருக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க பேஸ்புக் அதிரடி நடவடிக்கை 

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு

மேலும்
img
டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை பறிக்க  வாக்கெடுப்பு 

அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின்

மேலும்
img
ஆப்கானிஸ்தானிய படைகள் தாக்குதலில்  51 பயங்கரவாதிகள் பலி 

அந்த நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாத்கிஸ்

மேலும்
img
இந்தோனேசியாவின் பபுவாவில் பேய்மழைக்கு 42 பேர் பலி 

கிழக்கு பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில்

மேலும்
img
157 பேரைக் காவுகொண்ட எத்தியோப்பியா விமான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டு பிடிப்பு.

149 பயணிகள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img