செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை! அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை
வியாழன் 29 மார்ச் 2018 13:34:35

img

காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்துவருகிறது.

இதைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்துகொண்டனர். 

அதன் பின்னர், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்துவந்தது. அ.தி.மு.க எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தின் மக்களவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய கெடு இன்றுடன் முடிவடைகிறது. மத்திய அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வராத நிலையில், முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்லம் அமைச்சர் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்திவருகின்றனர். இதில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில், எவ்வாறான நடவடிக்கையை மத்திய அரசுக்கு எதிராக மேற்கொள்வது என்பதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img