வெள்ளி 17, ஆகஸ்ட் 2018  
img
img

``மார்ச் 29 வரை காத்திருப்போம்'' - மத்திய அரசுக்கு எதிரான தீர்மான கேள்விக்கு ஓ.பி.எஸ் பதில்
திங்கள் 19 மார்ச் 2018 15:43:01

img

மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு, வரும் 29-ம் தேதி வரை காத்திருப்போம் எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சட்டசபையில் தெரிவித்தார். 

தமிழக பட்ஜெட் கடந்த 15-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தொடர்பான விவாதத்துக்காகத் தமிழக சட்டசபை இன்று காலை மீண்டும் கூடி யது. இதில், கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், 'மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்க வேண்டும்' என்று கூறினார். இதற்குப் பதிலளித்த, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முடிவு எடுக்க வரும் 29-ம் தேதி வரை காத்திருப்போம். எந்த முன்னேற்றமும் இல்லை என்றால் அனைவரும் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்'’ என்றார். 

இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் கூடிய மக்களவையில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஜெகன்மோகன் ரெட்டி தலை மையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 50 எம்.பி-க்களின் கையெழுத்தைப் பெற்று, பா.ஜ.க அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற முனைப்பு காட்டிவருகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஈரோடு: பத்து கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

கொடுமுடி அருகே உள்ள காசிபாளையம், ஓஞ்சலூர்

மேலும்
img
மதச்சார்பின்மை பின்பற்றும் மாநிலமாக தமிழகம் உள்ளது: எடப்பாடி பெருமிதம்

இன்று காலை 7.30 மணியளவில் டெல்லி

மேலும்
img
சுதந்திரமடைந்து 70ஆண்டுகள் முடிந்திருப்பதைக் குறிக்கும் விதத்தில் ஒரு டாலர் ரூபாயின் மதிப்பு ரூ.70: திருமா

நமது நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளை

மேலும்
img
வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினிகாந்த்: கடம்பூர் ராஜூ

அ.தி.மு.க.வின் வரலாற்றினை தெரிந்து கொண்டு

மேலும்
img
அண்ணா அறிவாலயத்தில் எம்ஜிஆர் படத்தை வைக்க சொல்வாரா ரஜினி? புகழேந்தி

எது எங்கே வைக்க வேண்டும் என்பதை முடிவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img