திங்கள் 10, டிசம்பர் 2018  
img
img

ரிஞ்சிங் யோட்டத் தமிழ்ப்பள்ளியின் 66 மாணவர்கள் நச்சுணவால் பாதிப்பு 
செவ்வாய் 13 மார்ச் 2018 12:51:46

img

செமினி,

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சுமார் 66 மாணவர்கள் நச்சுணவு காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை 10 மணியளவில் பள்ளி சிற்றுண்டிசாலையில் நாசி லெமாக், நாசி கோரேங் முதலான உணவுகளை மாணவர்கள் உட்கொண்டனர்.இவ்வுணவை சாப்பிட்ட ஒரு மாணவர் நண்பகல் 12 மணியளவில் வாந்தி எடுத்ததை தொடர்ந்து பல மாணவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கினர்.

உடனே பள்ளியின் தலைமையாசிரியர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை அழைத்து தகவல் கூறினார்.அதன் பிறகு ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாண வர்களை அருகில் உள்ள பெரானாங் சுகாதார கிளினிக்கிற்கு அழைத்து சென்றனர்.முதலில் 25 மாணவர்கள் அந்த கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்ட னர். ஆனால் அதன் பிறகு இதர மாணவர்களும் வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து அவர்களையும் கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 13.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தமிழ் சோறு போடுமா? தமிழ் நிச்சயம் சோறு போடும். எங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கே அனுப்பி வாழ்க்கையில் உயரவைத்தோம்.

இன்று வரையிலும் தமிழ்ப் பள்ளிகளில்

மேலும்
img
நான் பிரதமராக இருந்தபோது போலீஸ் சோதனை நடத்தாதது ஏன்?

அம்னோவின் முன்னாள் உறுப்பினர் டத்தோஸ்ரீ கைருடின்

மேலும்
img
மனித உரிமைப் பேரணி ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைப்பு. மோதலைத் தவிர்க்கவே நடவடிக்கை.

ஒத்திவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது

மேலும்
img
எங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வாழ்க்கையில் உயரவைத்தோம்.

தமிழாசிரியர் சபா. கணேசு - இராஜேஸ்வரி சின்னதம்பி இணையர் 

மேலும்
img
எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை வளப்படுத்தியதே தமிழ்ப்பள்ளிகள்தான்.

தமிழ்ப்பள்ளியைத் தேர்வு செய்யுங்கள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img