செவ்வாய் 19, ஜூன் 2018  
img
img

வெளிநாட்டுப் பணம் எப்படி வந்தது? - சுப.உதயகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்
திங்கள் 05 மார்ச் 2018 18:29:20

img

அணுஉலையால் கிராமப் பகுதிக்கு ஆபத்து ஏற்படும். எனவே, அணுஉலைகளை மூட வேண்டும் எனக் கூறி, நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் சில ஆண்டுகளுக்கு முன் போராட்டம் நடைபெற்றது. அணு உலைக்கு எதிராக  நடந்த இப்போராட்டத்தின் காரணகர்த்தா, போராட்டக் குழு ஒருங்கி ணைப்பாளராக அறியப்படுபவர்,  சுப.உதயக்குமார். 

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இவரது போராட்டம், இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் திரும்பிப்பார்க்க வைத்தது. அரசுக்கு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இவரது போராட்டம், இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் திரும்பிப்பார்க்க வைத்தது. அரசுக்கு எதிரான இவரது போராட்டம், ஒருகட்டத்தில் வீரியமடைந்தாலும், பின்னாளில் அவரது போராட்டத்தை அரசு முடக்கியது. எனினும், அணுஉலைகளுக்கு எதிரான போராட்டத்தை சுப.உதயகுமார் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார். முன்னதாக போராட்டக் காலத்தின்போது, வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறுவதாகக் கூறி, இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 

மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், 'இந்த வழக்கில் ஆஜராக வேண்டும்' என உதயகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், நாளை காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 'ஆஜராகும்போது, தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்' எனவும் அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தாட்டி மகாராஜ் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே? விசாரணையில் காவல்துறை!

ராஜஸ்தானின் ஆலவாஸ் பகுதியில் உள்ள தாட்டி மகாராஜின்

மேலும்
img
கிரிக்கெட் மட்டையால் அடித்து சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுவன் - இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்றுபேர் சரண்

நேற்று இரவு நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் அலுவலகத்தில்

மேலும்
img
தீர்ப்பு வர காலதாமதம்: எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற முடிவு? சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்!

டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்

மேலும்
img
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் பிரச்சனை இல்லை! - குமாரசாமி

ஜூன் 12ஆம் தேதி காவிரி நதிநீர் தமிழகத்திற்கு

மேலும்
img
4 வருடத்தில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்த மோடி.

அதிலும் வருடத்திற்கு 4 நாட்கள் மட்டுமே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img