செவ்வாய் 19, ஜூன் 2018  
img
img

சிரியாவில் நடப்பது அப்பட்டமான போர்க்குற்றம்
சனி 03 மார்ச் 2018 15:57:51

img

ஜெனிவா:

சிரியாவில் அரசுப்படைகளும், ரஷ்யப்படைகளும் 13 நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில் பலி எண்ணிக்கை 674ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சிரியாவில் நடப்பது அப்பட்டமான போர்க்குற்றம் என ஐநா தெரிவித்துள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா நகரில் அரசுப்படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி ரஷ்ய விமானப்படை குண்டுவீசி வருகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தினமும் ஐந்து மணிநேரம் தாக்குதல் நிறுத்தி வைக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்தது. 

இருந்தபோதிலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாக பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய பேரவை ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியாவில் நடைபெற்று வரும் போர் விவகாரம் தொடர்பாக ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் கூடிய மனித உரிமை பிரிவு கூட்டத்தில் பெரும்பாலான நாடுகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய சிரியா பிரதிநிதி, தாங்கள் நடத்தி வரும் தாக்குதலை உலக நாடுகள் மிகைப்படுத்தி வருவதாக கூறியுள்ளார். இறுதியில் பேசிய மனித உரிமை ஆணைய பேரவை தலைவர், சிரியாவில் நடப்பது அப்படமான போர்க்குற்றம் என்றும் கிளர்ச்சியாளர்களை காரணம் காட்டி அப்பாவி பொதுமக்களை கொல்வது நிறுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
தென்கொரியாவுடன் மீண்டும் போர்ப்பயிற்சி? - கிம்முக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

இந்த சந்திப்பின்போது ட்ரம்ப் மற்றும் கிம் தனிப்பட்ட

மேலும்
img
குடும்பங்களை பிரிக்கும் டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

இவ்வாறு அவர் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள்,

மேலும்
img
வட கொரியவில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும்-கிம் ஜாங் அன் உறுதி

சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்- வடகொரியா

மேலும்
img
21 வருட சிறை தண்டனைக்கு விடிவு.. அதிபர் டிரம்பை சந்தித்து மூதாட்டியை விடுதலை செய்த கிம் கர்தஷியான்

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் வரவேற்பை

மேலும்
img
மோனிகா லெவின்ஸ்கியிடம் மன்னிப்பு கோரிய முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்

அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img