திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

ஈரான் பயணிகள்  விமானம் அலையில் மோதி 66 பேர் பலி.
திங்கள் 19 பிப்ரவரி 2018 11:20:31

img

தெஹ்ரான், பிப்.19-

ஈரான் பயணிகள் விமானம் ஒன்று மலைமீது மோதி விபத்துக்குள்ளானதில்  66 பேர் பலியானார்கள். இத்துயரச் சம்பவம் நேற்று காலையில் தெஹ்ரானிலிருந்து 620 கிலோ மீட்டர்  தொலைவில் உள்ள  செமிரோம் என்ற இடத்தில் உள்ள ஜாக்ரோஸ் மலைப்பகுதியில் நிகழ்ந்தது. ஈரானிய விமான நிறுவனமான அசெமான் ஏர்லைன்ஸிற்கு சொந்தமான  அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும் போதே  ராடாரிலிருந்து  மாயமானது.

இதனை அடுத்து, தெஹ்ரானில் இருந்து  620  கி.மீ தொலைவில் தென்மேற்குப் பகுதியில் உள்ள செமிரோம் மலைப்பகுதியில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளனதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  விமானத்தில் இருந்த 66 பேரும் பலியானதாக ஈரான்  அசெமான் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.  அனைத்து அவசர காலப் படைகளும் தயாராக இருப்பதாக அவசர சேவைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மோசமான காலநிலை காரணமாக சம்பவ இடத்துக்கு மீட்பு ஹெலிகாப்டர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் அசெமான் விமான நிறுவனத்தின் ஏ.டி.ஆர்.  72-500 விமானம் என நம்பப்படுகிறது.  விமானத்தில் 60 பயணிகளோடு, இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு விமான ஊழியர்கள், விமான ஓட்டுனர் மற்றும் ஒரு சக விமான ஓட்டுனர் என மொத்தம் 66 பேர் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மோசமான வானிலை மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததால் விபத்து நடந்த இடத்திற்கு அவசரகால குழுக்கள் ஹெலிகாப்டர்களில் செல்வதற்குப் பதிலாக சாலை வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பா ளரான குளிவந்த் கூறியுள்ளார்.  சமீபத்திய ஆண்டுகளில் ஈரானில் பல விமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அந்நாட்டிலுள்ள பல விமானங்கள் நீண்ட காலத்திற்கு முன்னர் வாங்கப்பட்டவையாக உள்ளன.

பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img