img
img

பக்கோடா  விற்பது நல்லவேலை என்றால் மோடி ஏன் பிரதமராக இருக்க வேண்டும்?
புதன் 07 பிப்ரவரி 2018 14:17:47

img

சென்னை, பிப்.7-

ஓர் இளைஞர் பக்கோடா விற்பதன் மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றார் என்றால், அதுவும் வேலைவாய்ப்பு தான் என பிரதமர் மோடி கூறியிருந்தார். பிரதமரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் எம்பியான பின்னர் பாஜக தலைவர் அமித்ஷா தனது கன்னிப்பேச்சில் மோடியின் பக்கோடா கருத்தை வரவேற்று பேசினார். இதனையடுத்து மேலும் மோடியின் பக்கோடா வேலைவாய்ப்பு குறித்த கருத்துக்கு விமர்சனங்கள் வலுக்கின்றன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மோடியின் இந்த பக்கோடா வேலைவாய்ப்பு குறித்து நார் நாராக கிழித்துள்ளார். முதலில் பிரதமரும் அமித்ஷாவும் பக்கோடா விற்றுக் காட்டினால் அதை பார்த்து நாமும் கற்றுக்கொண்டு விற்கலாம். பக்கோடா விற்பது நல்ல வேலை என்றால் மோடி ஏன் பிரதமராக இருக்க வேண்டும்? அமித்ஷா ஏன் பாஜக தலைவராக இருக்க வேண்டும்? இருவரும் பக்கோடா விற்க செல்ல வேண்டியதுதானே. நாட்டின் பிரதமரும் கட்சியின் தலைவரும் பக்கோடா விற்பதை பார்த்து நாமும் பக்கோடா விற்க போய்விடலாம்.

ஒரு காலத்தில் மோடி டீ விற்றார், இப்போது நம்மை பக்கோடா விற்க சொல்கிறார். அடுத்தது புரோட்டாவும் சால்னாவும் (கறி) விற்க சொன்னாலும் சொல்லலாம். ஏதோ  நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றார் சீமான்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்: தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

பாஜக அரசு இன்னும் கொண்டு வர உள்ளது

மேலும்
img
எடப்பாடி பழனிசாமி இல்லத்தை நோக்கி புறப்பட்ட மாணவர்கள் கைது

கைது செய்யப்பட்டவர்கள் உடனே விடுதலை செய்ய வேண்டும்

மேலும்
img
தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணைய சேவை: சந்தீப் நந்தூரி தகவல்!

ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம்

மேலும்
img
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை

மேலும்
img
மக்களின் ஆதரவால்தான் வலிமையாக செயல்பட முடிகிறது- பிரதமர் மோடி

125 கோடி இந்தியர்களும் இந்தியாவை மிகப் பெரிய

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img