வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

நோட்டாவோடுதான் தேசியக் கட்சிகளுக்குப் போட்டி!' - தம்பிதுரை கிண்டல்
செவ்வாய் 23 ஜனவரி 2018 14:04:29

img

தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். அதனால், எந்த நேரத்திலும் சட்டமன்றத் தேர்தல் வரலாம் என்ற நிலை பல மாதங்களாக நீடித்துவருகிறது. இந்தக் காரணத்தால், உள்ளூர் கட்சிகள் முதல் தேசியக் கட்சிகள் வரை அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன. மறு பக்கம், ரஜினி, கமல்ஹாசன், விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நேரடி அரசியலில் குதித்துள்ளனர். மாநிலத்தில் சூழல் இப்படி இருக்கையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, `தேசியக் கட்சிகள் நோட்டாவோடுதான் போட்டிபோட முடியும்' என்று கிண்டலாகக் கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், `தமிழகத்தில் திராவிட கலாசாரத்தை யாராலும் அழிக்க முடியாது. தமிழகத்தில் தேசியக்கட்சிகளுக்கு இடம் கிடையாது. தேசியக் கட்சிகள் நோட்டாவுடன்தான் போட்டியிட முடியும். திரைத்துறையிலிருந்து சினிமாவுக்கு வரும் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆகிவிடமுடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பதவிக்காக எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வரவில்லை, சமூக நீதியை நிலைநாட்டவே வந்தார். தற்போது, திரைத்துறையிலிருந்து நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஏன் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்' என்று ஆவே சமாகப் பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க, நோட்டாவைவிட குறைவான வாக்குகள் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img