செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

திராவிட - தமிழ் தேசிய பங்காளிச் சண்டைக்குள் வர நினைத்தால் மண்டை ரெண்டாயிடும்.
வெள்ளி 19 ஜனவரி 2018 18:57:41

img

சென்னை:

தமிழ் தேசிய கட்சிகளுக்கும், திராவிடக் கட்சிகளுக்கும் இடையே பங்காளிச் சண்டை தான் நடக்கிறது. இதையே காரணமாக வைத்து உள்ளே வர நினைத்தால் மண்டை உடைந்துவிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் சீமான் பேசியதாவது : அதிகாரத் திமிறில் தமிழகத்தில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இன்னும் வீரியமாக நடக்கிறது.

நான் சொல்கிறேன் ராஜா அதிமுக, திமுக முடிந்து விட்டது என்று கருதுகிறீர்கள். இதையே காரணமாக வைத்து உள்ளே வந்து விடலாம் என்று கன விலும் நினைக்காதீர்கள். கருப்பண்ண சாமி, ஐயனார் சாமி கையில் இருப்பதை விட பெரிய அரிவாளை வைத்துக் கொண்டு நிற்போம் நாங்கள். திரா விடக் கட்சிகளுக்கும், தமிழ் தேசியம் பேசும் எங்களுக்கும் நடப்பது பங்காளிச் சண்டை. 50 ஆண்டுகளாக நாட்டை கொடுத்தோம் நாட்டை நாசமாக்கி விட்டார்களே என்ற சண்டை.

இந்த சண்டைக்கு ஊடால வந்தா மண்ட ரெண்டாயிடும். தாமரை மலரும், தாமரை மலரும் என்று சொல்கிறார்கள். உடம்பில் படர்தாமரை தான் மலருமே ஒழிய இங்கு ஒரு தாமரையும் மலராது. நீங்க நோட்டாவுக்கு கீழே இருக்கிறீர்கள், பேட்டா ரஜினிகாந்தை கூட்டிக் கொண்டு வருகிறாய். தம்பி படத்தில் ஒரு டயலாக் வரும் நீ எந்த பக்கம் திரும்பினாலும் நான் நிற்பேன் என்று அதே போல ரஜினி எந்தப் பக்கம் திரும்பினாலும் அவரை எதிர்த்து நான் நிற்பேன்.

ரஜினி நினைத்துக் கொண்டார் சினிமாவில் சொல்வது போல நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரின்னு. தம்பி இங்க ஒவ்வொன்னையும் 100 தடவை சொல்லனும், அது தான் இங்கு இருக்கிற பெரிய பிரச்னை என்று பேசியுள்ளார் சீமான்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
img
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி

இந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே

மேலும்
img
காவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

உள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி

மேலும்
img
சர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்!!

இதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img