img
img

ஸ்ரீ சிவ சக்தி ஸ்ரீ சின்ன கருப்பன் ஆலயம் நேற்று உடைத்து தரைமட்டம்
வெள்ளி 12 ஜனவரி 2018 13:53:15

img

(எம்.கே.வள்ளுவன்)  மாசாய்,

மாசாய் வட்டாரத்தில் சுமார் 80 ஆண்டு காலம் அருள்பாலித்து வந்த  ஸ்ரீ சிவ சக்தி ஸ்ரீ சின்ன கருப்பன் ஆலயம் நேற்று உடைத்து தரை மட்ட மாக்கப்பட்டது பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  ஆலயத்தின் சிலைகள் கண்மூடித்தனமாக தகர்த்தெறியப்படுவதை கண்டு மக்கள் வெகுண்டு எழுந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த  ஆலயத்தை தற்காக்க கடந்த சனிக்கிழமை மக்கள்  கூடியதைத் தொடர்ந்து ஆலயத்தை உடைப்பதிலிருந்து பின் வாங்கிய நில மேம்பாட்டாளர் நிறு வனம் நேற்று யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆலயத்தை  உடைத்து தரைமட்டமாக்கியது.பண்டார் ஸ்ரீ ஹாலாம், ஜாலான்  தாசேக்  64 ஐ கடந்து சுமார் அரை கிலோ மீட்டரிலுள்ள லம்சான் செம்பனை தோட்டத்தில் அமைந்திருந்த அந்த அருள்மிகு சிவ சக்தி ஸ்ரீ சின்ன கருப்பன் ஆலயம் ஒரு காலத்தில் சீனர்களின் வழிபாட்டுத் தலமாக இருந்ததாக கூறப்படும் வேளையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆலயத்தலைவராக மு.மகேந்திரன் பொறுப்பேற்று சேவையாற்றி வந்தார்.

Read More: Malaysia Nanban News paper on 12.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நியத் தொழிலாலர் தற்காலிக வேலை அனுமதி ரத்து.

இதில் சம்பந்தப்பட்ட அந்நியத் தொழிலாளர்களை உடனடியாக அவர்களின்

மேலும்
img
என் பேத்தியின் காலணியைக் கூட விட்டு வைக்கவில்லை. - நஜீப் வேதனை

ஒரு முன்னாள் பிரதமர் என்ற முறையில் நான் மரியாதை

மேலும்
img
இந்திய உணவகங்களில் உள்நாட்டுச் சமையல்காரர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தவேண்டும்.

தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு

மேலும்
img
கிள்ளான் அரசு மருத்துவமனையில் நாற்காலிகள் பற்றாக்குறையா?

எலும்பு சிகிச்சை நோயாளிகள் அமரமுடியாமல் அவஸ்தை.

மேலும்
img
பத்துமலையில் சட்ட விரோத பேரணிக்கு நீதிமன்ற தடையுத்தரவு.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img