ஞாயிறு 20, ஜனவரி 2019  
img
img

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: தினகரன் தரப்பு ஆவணம் தாக்கல்!
செவ்வாய் 02 ஜனவரி 2018 15:58:19

img

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்திடம் தினகரன் தரப்பு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. 

ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சைபெற்றுவந்த அவர்,  டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறி வித்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பி லிருந்து கோரிக்கைகள் எழுந்தன. ஜெயலலிதா மறைவுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களிடத்தில் விசாரணை நடத்திவருகிறது ஆறுமுகசாமி தலைமையி லான விசாரணை கமிஷன்.

இதன் தொடர்ச்சியாக, தினகரனுக்கு சம்மன் அனுப்பியது விசாரணை கமிஷன். இதையடுத்துதான், தினகரன் தரப்பிலிருந்து பென் டிரைவ் சமர்ப்பிக்க ப்பட்டது. தினரகன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பென் டிரைவை சமர்ப்பித்தார். ஜெயலலிதா சிகிச்சைபெற்றபோது, எடுக்கப்பட்ட வீடியோ, பென் டிரைவில் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, தினகரன் தரப்பு ஆவணங்களைத் தாக்கல்செய்துள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img