செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

ரஜினிக்காகக் காத்திருக்கும் தொகுதி! - களத்தில் இறங்கினர் ரசிகர்கள்
செவ்வாய் 02 ஜனவரி 2018 14:36:01

img

அரசியலில் ஈடுபடப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்தையடுத்து, கிராமங்கள் தோறும் மன்றங்களைத் தொடங்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 

அதன்படி, ரஜினி பிறந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்துள்ள நாச்சிக்குப்பத்தில், புதிய மன்றங்களைத் தொடங்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது.  நாச்சிக்குப்பதில் ரஜினியின் பெற்றோர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ரானோஜிராவ் ராம்பாய் பொது நல அறக்கட்டளை முன்பாக, மாவட்ட ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் காலண்டரை வெளியிட்டு, புதிய மன்றங்கள் தொடங்குவதற்கான பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் மதியழகன் ஆரம்பித்து வைத்தார்.

மாவட்டத் தலைவர் மதியழகன் கூறுகையில், `ரஜினி, தமிழன் இல்லை என ஒரு சில அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர். இதைத் தவிடு பொடியாக்கத் தமிழகத்தில் ரஜினி பிறந்த ஊரான நாச்சிக்குப்பத்தில் புதிய மன்றங்களைத் தொடங்கும் பணியை ஆரம்பித்துள்ளோம். தமிழக மக்கள் ரஜினிக்குத் துணைநிற்பார்கள். சட்டசபைத் தேர்தலில் ரஜினியின் பிறந்த கிராமம் இருக்கும் வேப்பனப்பள்ளி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம்'' என்று தெரிவித்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img