img
img

பாடகி சித்ராவுக்கு ஹரிவராசனம் விருது
புதன் 27 டிசம்பர் 2017 18:17:35

img

ஹரிவராசனம் விருது இந்த ஆண்டு பின்னணிப் பாடகி சித்ராவுக்கு வழங்கப்பட இருக்கிறது. கேரள அரசின் சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சிறந்த பாடகர்களுக்கான ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது. முதல் ஆண்டு ஹரிவராசனம் விருது பாடகர் கே.ஜே.ஜேசுதாஸுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாகப் பாடகர்கள் ஜெயசந்திரன், ஜயன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமார், கங்கை அமரன் ஆகியோருக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2016 - 2017-ம் ஆண்டுக்கான கேரள அரசின் ஹரிவராசனம் விருதுக்கு சினிமா பின்னணிப் பாடகி சித்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சபரிமலையில் வருகிற ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்குப் பூஜையின்போது நடைபெறும் விழாவில் பாடகி சித்ராவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட இருக்கிறது. அந்த விருதுடன் 1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட இருக்கிறது. பாடகி சின்னக்குயில் சித்ரா  மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடிசா, இந்தி, அசாமி, வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். ஆறு முறை இந்தியத் தேசிய திரைப்பட விருதுகளையும் ஆறு முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img