புதன் 21, நவம்பர் 2018  
img
img

இப்படியும் திருடுவார்கள்... சென்னைவாசியைப் பதற வைத்த `மாப்பிள்ளைத் தேடல்'
புதன் 27 டிசம்பர் 2017 18:15:43

img

சென்னையை அடுத்த மாதவரத்தில் மாப்பிள்ளை பார்ப்பதுபோல நடித்து பணத்தைத் திருடியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

 
அதை நம்பிய சுப்பிரமணியன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பேசியபடி கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்தார். வரன் குறித்து இருவரும் பேசினர். அதன்பிறகு, சுப்பிரமணியனிடம் வெயில் அதிகமாக இருப்பதால்  ஓய்வு எடுத்துவிட்டுச் செல்வதாகக் கிருஷ்ணமூர்த்தி கூறினார். உடனே சுப்பிரமணி, தன்னுடைய படுக்கை அறையில் கிருஷ்ணமூர்த்தியை ஓய்வு எடுக்கும்படி தெரிவித்துள்ளார். ஓய்வு எடுத்த கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியனிடம் 'உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் எனக்குப் பிடித்திருக்கிறது. வீட்டில் உள்ளவர்களிடம் கலந்து பேசி பதில் சொல்கிறேன்' என்று புறப்பட்டுச் சென்றுள்ளார். 

அவர் சென்ற பிறகு, படுக்கை அறைக்குச் சென்ற கிருஷ்ணமூர்த்தி, பீரோவில் வைத்திருந்த 1.85 லட்சம் ரூபாய் மாயமாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு, மாதவரம் போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் மாப்பிள்ளை பார்க்க வந்த கிருஷ்ணமூர்த்தி மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது.

அவர் குறித்து விசாரணை நடத்தினர். சுப்பிரமணியனிடம், கிருஷ்ணமூர்த்தி கொடுத்திருந்த செல்போன் நம்பர் மூலம் அவர் இருக்கும் இடம் தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தியிடம் நைஸாகப் பேசிய போலீஸார் அவரது இருப்பிடத்தைக் கேட்டறிந்தனர். அப்போது, கிருஷ்ண மூர்த்தி, திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் கிருஷ்ணமூர்த்தியை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது, அவரது பெயர் கிருஷ்ணமூர்த்தி இல்லை சந்தானகோபாலன் என்று தெரிந்தது. மேலும், அவர், மாப்பிள்ளைப் பார்ப்பதாகக் கூறி கரூர், ஈரோடு ஆகிய இடங்களில் கைவரிசை காட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சந்தான கோபாலனைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 1.75 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் கேஸ் சிலிண்டர் அலுவலகத்திலிருந்து வருவதாகவும் வாடகைக்கு வீடு கேட்பது போலவும் குடிக்கத் தண்ணீர் கேட்பது போலவும் அதிகாரி என்றும் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து வீட்டுக்குள் நுழைந்து பணம், நகைகளைத் திருடிய சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், புதிய யோசனையாக வரன் பார்ப்பதுபோல வந்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மோசடி பேர்வழி பணத்தைத் திருடிய சம்பவம் மாதவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img