வியாழன் 22, மார்ச் 2018  
img
img

தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பும் விவேகமான முடிவினால்தான் உயர் நிலையை எட்டிப் பிடிக்க முடிந்தது
சனி 23 டிசம்பர் 2017 13:06:46

img

தேஜாஸ்வினி  ரவிசந்திரன் / சிம்பாங் லீமா  தமிழ்ப்பள்ளி, கிள்ளான்/ மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் /இயற்பியல் (ஆண்டு 4)

தன் பெற்றோர்  ச.ரவிசந்திரன் - சாந்தா தேவி ஆகியோ ரின் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பும் விவேகமான முடிவினால்தான் தன்னால் உயர் நிலையை எட்டிப் பிடிக்க முடிந்ததாக நம்பிக்கையோடு கூறுகின்றார் பினாங்கு  மலேசிய அறிவி யல் பல்கலைக்கழகத்தின்  (University Science Malaysia- USM) இயற்பியல் துறையின் (Applied Physics) இறுதியாண்டு மாணவியான தேஜாஸ்வினி ரவிசந்திரன்.

கிள்ளானைப் பூர்வீகமாகக் கொண்ட தேஜாஸ்வினி ரவிசந்திரன்  தனது ஆரம் பக் கல்வியை நாட்டிலேயே மிகவும் அதிகமான மாணவர்களைக் கொண்டிருக் கும் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியில் தொடங்கிய தாகக் கூறினார். தமிழ்ப் பள்ளி களில் மட்டுமே பெறக்கூடிய தன்னாளுமையையும்,  தன்னம் பிக்கையையும்  முழுமையாக உருவேற்றிய அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களை இன்றுவரை நினைவு கூர வைத்திருப்பதாகக் கூறும் தேஜாஸ்வினி ரவிசந்திரன் இடைநிலைப்பள்ளி கல்வியை கிள்ளான், ஷாபண்டாராயா பள்ளியில் (SMK Shahbandaraya, Klang) நிறைவு செய்தார்.

இளங்கலை பட்டப்படிப்பிற்கு முந்தைய ஆயத்தக் கல்வியை (Foundation Studies) மணிப்பால் அனைத்துலக   பல்கலைக் கழகத்தில் (Manipal International University) தொடர்ந்த பின் மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் இளங் கலை பட்டப்படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்ததாகக் கூறினார். 

தமிழ்ப்பள்ளியில் பயில்வதற் கான வாய்ப்பு கிடைத்ததால்தான் தன்னம்பிக்கையோடு எல்லா வகையான சவால்களையும் இடைநிலைப் பள்ளிகளில் சமாளிக்க முடிந்ததாகக் கூறியதோடு ஆங்கில மொழியின்  ஆற்றலின் வழியே உயரிய துறையினில் சிக்கல்கள் இல்லாமல் பயில முடிவதாக உறுதி யாகக் கூறுகின்றார் தேஜாஸ்வினி ரவிசந்திரன்.

இளங்கலை பட்டப்படிப்பினை முடித்த பின்னர் அதே துறையில் முதுகலை பயிலும் முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகக் கூறிய தேஜாஸ்வினி ரவி சந்திரன் தமிழ்ப்பள்ளிகளில் இரட்டைமொழி அமலாக்கத்தினால் பல நன்மைகளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பெறமுடியும் என்ற கருத்தையும் வெளிப்ப டுத்தியுள்ளார். 

தமிழ்ப்பள்ளிகள் வெறும் கல்வி கூடங்கள் மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு மிகச் சிறந்த வாழ்வியலைச் செதுக்கும் கூடங்களாகவும் அமைந்திருப்ப தாக தனது அனுபவத்தினை வெளிப்படுத்தினார் தேஜாஸ்வினி ரவிசந்திரன். 

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. வாழ்க்கை கல்விக்கு வித்திட்ட துன் அமினா தமிழ்ப்பள்ளி

ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் வாழ்க்கை கல்விக்கும்

மேலும்
img
தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பும் விவேகமான முடிவினால்தான் உயர் நிலையை எட்டிப் பிடிக்க முடிந்தது

தேஜாஸ்வினி ரவிசந்திரன்

மேலும்
img
இமயமென உயர்த்திய வாட்சன் தமிழ்ப்பள்ளி

கல்வி பயணத்தின் உச்சியை ஈட்டுவதற்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img