வியாழன் 18, ஜனவரி 2018  
img
img

தமிழ்ப்பள்ளியே எங்கள் தேர்வு. என் இலக்கை வடிவமைத்த மேரு தமிழ்ப்பள்ளி
ஞாயிறு 17 டிசம்பர் 2017 10:20:42

img

பெயர்: கலாஷினி ஜெயக்குமாரன்

தமிழ்ப்பள்ளி: மேரு சாலை தமிழ்ப்பள்ளி கிள்ளான்

பல்கலைக்கழகம்: மலாயா பல்கலைக்கழகம்

துறை:உயிரியல் மருத்துவ பொறியியல் (ஆண்டு1)

முதலாம் ஆண்டின் கல்வி பயணத்திற்கு விதையாய் அமைந்த கிள்ளான் மேரு சாலை தமிழ்ப்பள்ளியே  தனது எதிர்கால இலக்கினை வடிவமைத்ததாகப் பெருமையோடு கூறுகின்றார் மலாயா பல்கலைக்கழகத்தின்  உயிரியல் மருத்துவ பொறியியல்  (Bio Medical Engineering) துறையின் முதலாம் ஆண்டு மாணவியான கலாஷினி ஜெயக்குமாரன்.

கோ.ஜெயக்குமாரன் - மல்லிகா தம்பதியரின் மூன்று பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையான இவரின் லட்சியக் கனவுகளுக்கு   அடித்தளம் அமைத்த வர்கள் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்களே என்பதை  ஆணித்தரமாக  கூறுகின்றார். யூபிஎஸ்ஆர் தேர்வில் 6 ஏயும், பி.எம்.ஆர். தேர்வில் 8 ஏயும், எஸ்பிஎம் தேர்வில் 10 ஏயும் பெறுவதற்கான  வாய்ப்பினை  தமிழ்ப்பள்ளியே வழங்கியதாகக் கூறும் கலாஷினி ஜெயக்குமாரன் தனது தொடர் கல்வியை  மலாக்கா மெட்ரிகுலேஷன் கல்லூரியில் ஓராண்டு கல்விக்குப் பின்னர் மிகச் சிறந்த தேர்ச்சியினைப் பெற்று மலாயாப் பல்கலைக் கழக வாய்ப்பினைப் பெற்றுள்ளதாக கூறினார். தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களின் எதிர்காலத்தினை செதுக்கும் கூடங்களாகவே அமைந் திருப்பதாக பெருமையோடு  இவர் கூறுகின்றார்.

முதலாம் ஆண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு வரை அறிவியலையும், கணிதத்தையும் ஆங்கில மொழியில் பயிலும் வாய்ப்பினால் இடைநிலைப் பள்ளியில் மிகச் சிறந்த  ஆங்கில மொழி ஆற்றலைப் பெற்றதோடு பிற மாணவர்களோடு எல்லா பாடங்களிலும் போட்டியிடும் ஆற்றலைப் பெற்றதாகக் கூறிய ஜெ.கலாஷினி  கிள்ளான் கான்வெண்ட் இடைநிலைப் பள்ளியின் பரிசளிப்பு விழாவில் படிவம் 5க்கான ஆங்கில மொழிப் பாடத்தில்  மிகச் சிறந்த  மாணவி யாகத் தேர்வு பெற்றதை மிகச் சிறந்த வெற்றியாகக்  கருதுவ தாகக் கூறியுள்ளார். 

உயிரியல் மருத்துவ பொறியியல் துறையில் முனை வர் கல்வியைப் பெறுவதை தனது இலக்காகக் கொண்டிருக்கும்  ஜெ.கலாஷினி அறிவியல் கண்டு பிடிப்பாளராகும் (scientist) கனவினை விதைத்திருப்ப தாகவும் கூறியுள்ளது. தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியையே பிரதிபலிப்பதாக அறிய வேண்டி யுள்ளது. -தமிழ்ப்பள்ளியே நமது இலக்கு. 

 

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.தலைமைத்துவ ஆற்றலை வளர்த்த அலோர்காஜா தமிழ்ப்பள்ளி

கல்லூரியில் காலடி எடுத்து வைக்க எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழிப்பாடமும்,

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே எங்கள் தேர்வு. என் இலக்கை வடிவமைத்த மேரு தமிழ்ப்பள்ளி

தமிழ்ப்பள்ளியே நமது இலக்கு.

மேலும்
img
 அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டி

 ஜொகூரின் இரு தமிழ்ப்பள்ளி  மாணவர் வாகை 

மேலும்
img
கின்னஸ் உலக சாதனையாளர் புத்தகத்தில் மலேசிய பரதநாட்டிய மாணவர்களின் பெயர்

ஆசியா சாதனையாளர் புத்தகத்திலும் தமிழ் நாட்டு சாதனையாளர்

மேலும்
img
சரித்திரம் படைத்தது மலேசியா.

வெற்றிவாகை  சூடினர் மாணவர்கள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img