img
img

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நடிகர் விஷால் கேட்கும் சின்னம் இதுதான்!
திங்கள் 04 டிசம்பர் 2017 19:28:56

img

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தனக்கு விசில் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று நடிகர் விஷால் அனுமதி கேட்டுள்ளார். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் அவைத்தலைவர் மதுசூதனனும் தி.மு.க சார்பில் மருதுகணேஷூம் பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜனும் சுயேச்சையாக டி.டி.வி. தினகரனும் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் சங்கப் பொதுச் செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் அதிரடியாக அறிவித்து வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார். வேட்புமனுத்தாக்கலுக்கு முன்னதாக காமராஜர், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த விஷால், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்றும் மரியாதை செய்திருந்தார். 

சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கும் விஷால், தனக்கு விசில் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று அனுமதி கோரியுள்ளார். அந்தச் சின்னம் இல்லா விட்டால் படகு, கேரம் போர்டு ஆகிய சின்னங்களை ஒதுக்குமாறு கேட்டுள்ளார். ஏற்கெனவே வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள டி.டி.வி.தினகரன், தனக்கு தொப்பிச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அவர் கேட்டிருந்த மாற்று சின்னங்கள் பட்டியலில் விசிலும் கிரிக்கெட் பேட்டும் இடம்பெற்றுள்ளன.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மக்களுக்கு சேவை செய்வது எல்லாம் வீண்... படுதோல்வியால் குமுறும் அமமுகவினர்

அதிமுக மற்றும பாஜக ஜெயிக்க கூடாது

மேலும்
img
அன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

பாமகவின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு

மேலும்
img
ஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி?

ஏதோ ஒரு அதிர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கவிருக்கிறார் மோடி

மேலும்
img
கனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி!

ஒரு வேளை பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி

மேலும்
img
ஆட்சி பறிபோகும் நிலை! சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு!

எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img