செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

போராட்டக் களத்துக்குச் சென்ற செவிலியர் ஜூலிக்கு போலீஸ் தடை!
புதன் 29 நவம்பர் 2017 15:52:28

img

சென்னையில் டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவரும் அரசு ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த செவிலியர் ஜூலிக்கு காவல்துறையினர் அனுமதியளிக்க மறுத்துவிட்டனர்.

தற்போது, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் கடந்த மூன்று நாள்களாகச் செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செவிலியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்கட்டமாக 200 செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் ஒரு வருடம் கழித்து 1,000 செவி லியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகச் செவி லியர்களின் பிரதிநிதிகள் அறிவித்தனர். இதை ஏற்க செவிலியர்கள் மறுத்துவிட்டனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, இன்று காலை செவிலியர் ஜூலி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக டி.எம்.எஸ் வளாகத்துக்கு வந்தார். அவரைக் காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர். அப்போது, காவலர்களிடம், `நானும் செவிலியர்தான். என்னை அனு மதியுங்கள்' என்று கேட்டுக்கொண்டார். ஆனால், காவல்துறையினர் ஜூலியை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து ஜூலி அங்கிருந்து சென்றுவிட்டார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img