img
img

'எதிரி' அ.தி.மு.க; 'துரோகி' தி.மு.க! - தினகரனை ஆதரிக்கும் விஜயகாந்த்?
செவ்வாய் 28 நவம்பர் 2017 14:10:04

img

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை' என தே.மு.தி.க தலைமை அறிவித்துவிட்டது. 'இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என விஜயகாந்த் கூறினாலும், தினகரனுக்கு ஆதரவாக தே.மு.தி.க நிர்வாகிகள் தேர்தல் வேலை பார்க்கும் வாய்ப்புகள் அதிகம்' என்கின்றனர் வடசென்னை தே.மு.தி.க நிர்வாகிகள். 

தினகரன்"ஆர்.கே.நகர் தொகுதிக்குக் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவித்தபோது, தே.மு.தி.க வடசென்னை மாவட்டச் செயலாளர் மதிவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது உடல்நலிவுற்று இருந்தாலும் பிரசாரத்தில் கலந்துகொண்டார் விஜயகாந்த். தொகுதிக்குள் வரலாறு காணாத பணப்புழக்கம் காரணமாக, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 'இந்தமுறை மீண்டும் மதிவாணனே போட்டியிடுவார்' என நிர்வாகிகள் எதிர்பார்த்திருந்தனர். ' போட்டியிட விருப்பமில்லை' எனக் கட்சித் தலைமை உறுதியாக அறிவித்துவிட்டது. இதன் பின்னணியில் வேறு சில காரணங்கள் இருக்கின்றன" என விவரித்த தே.மு.தி.க நிர்வாகி ஒருவர், "பொதுவாக, இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றி பெறும். அதையும் மீறி பென்னாகரம் உள்பட பல இடைத்தேர்தல்களை தே.மு.தி.க சந்தித்துள்ளது. தற்போதுள்ள சூழலில் தனித்துப் போட்டியிட்டுக் கைக்காசை இழப்பதற்குக் கட்சி நிர்வாகிகள் விரும்பவில்லை.

பிரதான கட்சிகளுடன் கூட்டணி என்றால், கடன் வாங்கி செலவு செய்வதற்கு தயங்க மாட்டார்கள். தனித்துக் களம் இறங்கும்போது, நிர்வாகிகள் பலரும் மௌனமாக ஒதுங்கிவிடுகின்றனர். இதைக் கட்சித் தலைமையும் உணர்ந்து வைத்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதுகுறித்து சில நாள்களுக்கு முன்பு கேப்டனுடன் தீவிர ஆலோசனை நடந்தது. தொகுதி நிலவரம்குறித்து கட்சி நிர்வாகிகள் விளக்கியுள்ளனர். அப்போது பேசிய விஜயகாந்த், ' அ.தி.மு.க நமக்கு எதிரி. தி.மு.க நமக்கு துரோகி. இவர்கள் இருவரைத் தவிர, வேறு யார் வந்து கேட்டாலும் ஆதரவு கொடுங்கள்' என சிம்பாலிக்காக சொல்லிவிட்டார். தேர்தல் களத்தைப் பொறுத்தவரையில், தி.மு.கவுக்கு ஆதரவாக வி.சி.கவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் களம் இறங்கியுள்ளன. அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி பெறுவதற்கு ஆளும்கட்சி முனைப்பு காட்டும். இவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் தினகரன் மட்டுமே தனித்துத் தெரிகிறார். அவருக்கு ஆதரவு கொடுப்பது பற்றியும் கட்சி நிர்வாகிகள் பேசியுள்ளனர். இதற்குத் தலைமையிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. எனவே, வடசென்னை நிர்வாகிகள் அனைவரும் தினகரனுக்குத் தேர்தல் வேலை பார்க்கும் வாய்ப்புகள் அதிகம்" என்றார் விரிவாக. 

"இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தினகரனுக்கு தே.மு.தி.க ஆதரவு என்பது கூடுதல் பலம் தரும். அடுத்து வரக் கூடிய தேர்தல்களிலும் தினகரனுடன் கூட்டுச் சேர வேண்டும் என்பதில் தே.மு.தி.க நிர்வாகிகள் சிலர் உறுதியாக உள்ளனர். 'அப்படியொரு கூட்டணி உருவானால், நம்முடன் வேறு சில கட்சிகளை இணைத்துக் கொள்ளலாம்' என்பது தலைமையின் கணக்கு. இடைத்தேர்தல் பிரசாரத்தில் தினகரனுடன் தே.மு.தி.க கொடியும் செல்லுமா என்பது ஒரு சில நாள்களில் தெரிந்துவிடும்" என்கின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img