ஞாயிறு 20, ஜனவரி 2019  
img
img

பேட்டி கொடுக்காதீங்க'- எச்சரித்த முதல்வர்; எஸ்கேப் ஆன செல்லூர் ராஜு
புதன் 22 நவம்பர் 2017 16:11:00

img

தமிழகம் முழுவதும் பல இடங்களில்,  நியாயவிலைக் கடையில் சர்க்கரை விலை ஏற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தி.மு.க-வினர் இன்று போராட்டம் நடத்திவருகின்றனர். மதுரையில், தி.மு.க மாவட்டச் செயலாளர் மூர்த்தி, பி.டி.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ, உள்ளிட்டோர் தலைமையில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதுதொடர்பாக, இன்று காலை 8:30 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு  திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தத் தகவல் முதல்வர் வட்டாரங்களுக்குத் தெரியவந்துள்ளது. அதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜுக்குப் போன்செய்து, நீங்கள் பத்திரிகையாளர்களை இதுதொடர்பாக சந்திக்க வேண்டாம். உங்கள் பேச்சு பரபரப்பையும் புகைச்சலையும் ஏற்படுத்திவிடும். இது, தி.மு.க-வின் போராட்டத்துக்கு நாம் விளம்பரம் தேடிக்கொடுத்ததுபோலஆகிவிடும்'' என கடுமையாகத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, உடனடியாக செல்லூர் ராஜு பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் தூத்துக்குடிக்கு கிளம்பிவிட்டதாக, செல்லூர் ராஜுவின் மிகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img