வெள்ளி 22, மார்ச் 2019  
img
img

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
திங்கள் 20 நவம்பர் 2017 16:10:12

img

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ஷிஃபாலி ரங்கநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

38 வயதான ஷிஃபாலி ரங்கநாதன் சியாட்டிலில் பொதுப்போக்குவரத்துக்கான கொள்கை வகுக்கும் கூட்ட மைப்பின் செயல் இயக்குநராகப் பணியாற்றிவந்தார். தற்போது சியாட்டில் நகர துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஷிஃபாலியின் தந்தை பிரதீப் ரங்கநாதன். தயார் செரில். ஷிஃபாலி நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு கான்வென்ட் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் விலங்கியலில் இளங்க லைப் பட்டம் பெற்றார். அதன்பின்னர் அண்ணா பல்லைக்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.

2001-ம் ஆண்டில் அமெரிக்கா சென்று அங்குள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே அவருக்கு அரசு வேலைக்கு அழைப்பு வந்துள்ளது. சியாட்டில் போக்குவரத்துக் கொள்கை வகுப்புக் கூட்டமைப்பில் இயக்குநராக வேலைக்குச் சேர்ந்த அவர் 2014-15-ம் ஆண்டில் செயல் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில், துணை மேயர் கௌரவம் அவரைத் தேடி வந்துள்ளது.

ஷிஃபாலியின் கடின உழைப்பும், முயற்சிகளுமே அவரை இந்த நிலைக்கு உயர்த்தி இருப்பதாக மகளை நினைத்து மகிழ்கிறார் தந்தை பிரதீப் ரங்கநாதன்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
அமெரிக்காவில் திடீர் வெள்ளம் 

மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா, ஐயோவா,

மேலும்
img
தேர்தல் தகராற்றில் 6 பேர் சுட்டுக் கொலை

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி

மேலும்
img
மசூதிகளில் மக்களைக் கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் -நியூசிலாந்து பிரதமர் 

சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும்

மேலும்
img
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க பேஸ்புக் அதிரடி நடவடிக்கை 

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு

மேலும்
img
டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை பறிக்க  வாக்கெடுப்பு 

அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img