வெள்ளி 22, மார்ச் 2019  
img
img

பிரதமர் ஹரிரி சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்; லெபனான் அதிபர் ஆன்
புதன் 15 நவம்பர் 2017 18:28:49

img

பெய்ரூட்,

லெபனான் நாட்டு பிரதமராக இருந்தவர் சாத் அல்-ஹரிரி.  இவர் கடந்த 4ந்தேதி சவுதி அரேபியா சென்றார். சவூதி அரேபியாவில் இருந்தபடியே, ’தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவி விலகுகிறேன்’ என்று அறிவித்தார். ஆனால் அதை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. அவர் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அதிபர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர்.

இதனை தொடர்ந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹரிரி சமீபத்தில் அளித்த பேட்டியில், இன்னும் சில நாட்களில் நான் லெபனான் திரும்புவேன். வளைகுடாவில் நூற்றுக்கணக்கான லெபனானிய மக்களுடைய வாழ்வாதாரங்கள் ஆபத்தில் உள்ளன என கூறினார். இந்நிலையில் டுவிட்டரில் நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்தியில், லெபனான் மக்கள் அமைதியுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். நான் நலமுடன் இருக்கிறேன் என தெரி வித்துள்ள ஹரிரி, இன்னும் 2 நாட்களில் லெபனானுக்கு திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஹரிரி சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார் என லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் இன்று கூறியுள்ளார். அவர் லெப னான் ஜனாதிபதி அலுவலக டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் சாத் ஹரிரி 12 நாட்களாக நாடு திரும்பவில்லை.  அதனால் அவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்துள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
அமெரிக்காவில் திடீர் வெள்ளம் 

மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா, ஐயோவா,

மேலும்
img
தேர்தல் தகராற்றில் 6 பேர் சுட்டுக் கொலை

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி

மேலும்
img
மசூதிகளில் மக்களைக் கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் -நியூசிலாந்து பிரதமர் 

சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும்

மேலும்
img
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க பேஸ்புக் அதிரடி நடவடிக்கை 

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு

மேலும்
img
டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை பறிக்க  வாக்கெடுப்பு 

அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img