img
img

தனது இரு பெண் பிள்ளைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றம்
செவ்வாய் 14 நவம்பர் 2017 12:56:32

img

(எம்.கே.வள்ளுவன்)

ஜொகூர் பாரு,

தனது இரு பெண் பிள்ளைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக தாயார் ஒருவருக்கு  ஜொகூர் பாரு செஷன்ஸ்  நீதிமன்றத்தில் நேற்று 75 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

39 வயதுடைய  அந்த தாயாருக்கு எதிராக  மொத்தம் 10  குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்ட வேளையில்  குற்றச்சாட்டுகளை அப்பெண்மணி  ஒப்புக் கொண்டதால்  செஷன்ஸ்  நீதிபதி  கமாருடின்  கம்சுன்  அத்தண்டனையை  விதித்தார். 

கடந்த அக்டோபர் முதல் தேதி காலை  9.25 மணிக்கும் பிற்பகல்  12.21 மணிக்கும் இடையிலும், அக்டோபர் 4 ஆம் தேதிக்கும் 7 ஆம் தேதிக்கும் இடை யிலும்  ஜொகூர்  பாரு லார்க்கின்  பெர்டானா ஜாலான்  சூசூர்  டெவேட்டா 1 லுள்ள  விடுதியொன்றில்  தனது 10, 13 வயதுடைய  மகள்களை விபச்சா ரத்தில் ஈடுபடுத்திய காரணத்திற்காக சிறுமிகளின்   தாயாருக்கு  அத்தண்டனை  விதிக்கப்பட்டது. 

2001  ஆம் ஆண்டு  சிறுவர்கள் சட்டம்  பிரிவு  31, 2017 சிறுவர்கள் பாலியல் சட்டம் பிரிவு  16 (1) இன்  கீழ் முன்னதாக சிறுமிகளின்  தாயார் மீது   பத்து குற்றச்சாட்டுகளும் கொண்டு வரப்பட்டன. இரு சிறுமிகளை அக்டோபர்  முதல் தேதி, 4,5,6,7 ஆம் தேதிகளில்  விபச்சாரத்தில் ஐந்து  முறை ஈடு படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தனது மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதன் மூலம்  ஒரு வெள்ளி 5 வெள்ளி, 10 வெள்ளி, 20 வெள்ளி, 50  வெள்ளியும் மகள்களின்  விபச்சார சேவைக்காக தாயார் பெற்றுள்ளார். 

Read More: Malaysia nanban News paper on 14.11.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அன்வாரை நலம் விசாரித்தார் பிரதமர் நஜீப்

தோள்பட்டையில் ஏற்பட்ட கடுமையான வலியினால்

மேலும்
img
டி.மோகன் நேற்று அதிகாரப்பூர்வமாக செனட்டர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

இந்த பதவி உறுதிமொழி நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர்

மேலும்
img
கூட்டரசுப் பிரதேச அமைச்சும், டிபிகேஎல்லும் மக்களைப் பந்தாடுகின்றன

இப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்

மேலும்
img
வங்கி அனுமதியின்றி காரை குத்தகைக்கு விடும் உரிமையாளருக்கு அபராதம், சிறை

வங்கிக் கடனைத் தொடர்ந்து செலுத்துவதற்காக,

மேலும்
img
மண்ணின் மைந்தர்களின் படைப்புகளை திரையரங்குகளில் ஓரங்கட்டுவது ஏன்?

ஜாங்கிரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் நந்தினி 

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img