திங்கள் 16, ஜூலை 2018  
img
img

ஐ.டி விசாரணை வளையத்தில் விவேக்!
திங்கள் 13 நவம்பர் 2017 18:38:49

img

ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக்கை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 

சென்னை: ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள இல்லத்தில் 5 நாட்களாக நடைபெற்று வந்த சோதனையை அடுத்து விவேக்கை வருமானவரித்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்து சென்றனர். 

ரூ. 1000 கோடி மதிப்புடைய ஜாஸ் சினிமா:
சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் கட்டுப்பாட்டில்  ஜாஸ் சினிமா கம்பெனி இயங்கி வருகிறது. மேலும் ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர்.நாளிதழ் விவேக் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 27-வயதான விவேக்குக்கு ஏராளமான சொத்து வந்தது எப்படி என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

சோதனையின் மையப்புள்ளி விவேக்:
தமிழகம் முழுவதும் நடந்த வருமானவரி சோதனையில் விவேக் தான் மையப்புள்ளி. ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையைப் சசிகலா அண்ணன் மகன் விவேக் பெற்று இருந்தார். ஜெயலலிதா, சசிகலாவின் பினாமி சொத்து விவரம் பற்றி விவேக்கிடம் அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.

ஐ.டி. அலுவலகத்தில் விவேக்:
சென்னை வருமானவரி புலனாய்வு அலுவலகத்தில் விவேக்கிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விவேக் வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் பற்றி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை சத்யம் சினிமாஸிடமிருந்து வாங்கியது எப்படி? என்றும் 27 வயதான விவேக்குக்கு கோடிக்கணக்கில் சொத்து வந்தது எப்படி என்றும் அதிகாரிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.  

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
சசிகலா, எடப்பாடி, ப.சிதம்பரம் - முட்டை ஊழலில் மூவர் கூட்டணி? ஐ.டி ரெய்டில் சிக்கிய ஷாக் தகவல்கள்

நுகர்பொருள் வாணிப கழக மேலாளராக

மேலும்
img
தமிழகத்தில் கூட்டணி குறித்து கவலைப்படவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

20 சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமனம்

மேலும்
img
டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த பகுதியில் ஆவி நடமாட்டமா??!!

அமானுஸ்ய மாந்த்ரீக கொலை என ஒரு பேச்சு

மேலும்
img
கூட்டணிக்கு வியூகம் வகுத்த அமித்ஷா! - ஆன்மீக அரசியலில் ரஜினியின் அடுத்த மூவ்!

2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற

மேலும்
img
அற்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள்: டி.டி.வி. தினகரன் பேட்டி

மிழக அரசு சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img