திங்கள் 15, அக்டோபர் 2018  
img
img

ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலி!
திங்கள் 06 நவம்பர் 2017 13:47:27

img

சவுதி இளவரசர் மன்சூர் பின் மோக்ரன், ஏமன் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

மன்சூர் பின் மோக்ரன், அசிர் மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்துவந்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளுடன் இவர் சென்ற ஹெலிகாப்டர், சவுதி அரேபியா-ஏமன் எல்லையில் விபத்தில் சிக்கியது. அதில், மன்சூர் பின் மோக்ரன் மற்றும் ஹெலிகாப்டரில் இருந்த அதிகாரிகள் உயிரிழந்தனர்.

மன்சூர் பின் மோக்ரன் உயிரிழந்த செய்தியை அல்-எக்பரியா செய்தித் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆனால், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக 11 இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சவுதி அரேபிய அரசு கைதுசெய்துள்ள நிலையில், இளவரசர் மன்சூர் பின் மோக்ரனின் மரணம் நிகழ்ந்துள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
விலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு

பே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா

மேலும்
img
மீடூ குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள்  ஆதாரங்களை காட்ட வேண்டும்

அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த மீடூ

மேலும்
img
900 பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை 

தான் வளர்த்த 12 முதல் 17 வயது வரை உள்ள சிறுமிகளை

மேலும்
img
ஆப்பிரிக்காவின் இளம் இந்திய கோடீஸ்வரர் கடத்தல் 

இந்த சம்பவத்தின் போது முகமது டியூஜியுடன் பாதுகாவலர்கள்

மேலும்
img
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பாரிஸில் மாதத்தில் ஒருநாளில் கார்களுக்கு தடை 

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img