img
img

வயிற்றிலுள்ள குழந்தைக்கு உடனே வெளியேறுமாறு சட்டப்பூர்வ நோட்டீஸ்
புதன் 25 அக்டோபர் 2017 18:57:39

img

வாஷிங்டன்:

பிரசவ வலி ஏற்பட்டு நின்றுவிட்டதால் பொறுமையை இழந்த பெண் ஒருவர் தன் வயிற்றிலுள்ள குழந்தைக்கு உடனே வெளியேறுமாறு சட்டப்பூர்வ நோட்டீஸ் வழங்கிய வினோத சம்பவம் அமெரிக்காவில் நடை பெற்றுள்ளது. பெண்ணுக்கு பிரசவம் என்பது மறு பிறவி போன்றது. அமெரிக்காவின் உதாவில் உள்ள கெயில் பே என்று பெண் அங்குள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் மூன்றாவதாக கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான இவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த 16-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். 

அப்போது பிரசவ வலி ஏற்பட்டது. இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்றிருந்தார். ஆனால் அதற்கு பிரசவ வலி முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் வலி வரும் என காத்திருந்து காத்திருந்து சோர்வ டைந்தார்.

பொறுமை இழந்த அவர் தன்னுடன் பணியாற்றும் நீதிபதியை அணுகி குழந்தை தன் வயிற்றில் இருந்து உடனடியாக வெளியேற சட்டப்பூர்வமான நோட்டீஸ் வழங்க கோரினார். அந்த நீதிபதி லின் டேவிஸ், கெயில் பேயின்   கருவறையில் இருப்பவர் என்ற முகவரியிட்டு கையெழுத்திட்ட வெளியேற்ற நோட்டீஸை அனுப்பி னார். இதை அந்த தாய் தனது கருவில் உள்ள குழந்தையிடம் படித்துக் காண்பித்தார்.

இந்த நீதிமன்றத்தின் நோட்டீஸுக்கு மதிப்பளிப்பதாக நினைத்து அந்த சிசு 12 மணிநேரம் கழித்து வெளியே வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
கருத்துக்கணிப்புகள் ஜெயிக்குமா?

தேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து

மேலும்
img
கர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் மருத்துவர்கள் சாதனை

குழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள்

மேலும்
img
கால்களால் விமானம் ஓட்டும்  முதல் பெண் விமானி 

ஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும்

மேலும்
img
விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டனின் போர் தளபதி மீது நடவடிக்கை 

அரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி

மேலும்
img
டயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்

இளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img