திங்கள் 15, அக்டோபர் 2018  
img
img

உங்களுடன் பயணிப்பது கடினம்’ - பா.ஜ.க-விலிருந்து விலகிய மகளிரணிச் செயலாளர்
சனி 21 அக்டோபர் 2017 16:21:03

img

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மகளிரணிச் செயலாளர் மற்றும் ஊடகச் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த ஜெமீலா தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெமீலா கூறியிருப்பதாவது, “நான் கடந்த 2 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணிச் செயலாளர் மற்றும் ஊடகச் செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராகக் கட்சிப் பணி செய்து வந்தேன் . பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் என்னை இணைத்துக்கொண்டேன்.

இருப்பினும், எனக்கு கடந்த சில மாதங்களாகக் கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு கருத்து வேறுடுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் தமிழக பா.ஜ.க-வின் கொள்கைகள் எழுத்தளவிலும் செயலளவிலும் மாறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும் உள்ளது. என்னைப்போன்ற கிறிஸ்துவ சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பயணிப்பது கடினம் என்பதை உணர்கிறேன். எனவே இன்று முதல் எனது அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ - தமிழக அரசு மேல்முறையீடு

கடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகை

மேலும்
img
தமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்

வரும் 14-ம் தேதி வரை நடக்கும்

மேலும்
img
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!!

திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்தி

மேலும்
img
ப.சிதம்பரத்தின் கோடிக்கணக்கிலான சொத்துக்கள் முடக்கம்

லண்டனில் இருக்கும் வீடுகள்,

மேலும்
img
ஆதாரங்கள் இருந்தும் ஊழல்கள் விசாரிக்கப்படுவதில்லை- ராமதாஸ் குற்றச்சாட்டு

ரூ.33 கோடி இழப்பு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img