img
img

ஈப்போ லிட்டில் இந்தியா சேலை அழகு ராணியாக ஹேமதர்ஷினி தேர்வு
வெள்ளி 20 அக்டோபர் 2017 13:25:44

img

தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி ஈப்போ பாராட் தொகுதி  காங்கிரஸ், ஈப்போ லிட்டில் இந்தியா வர்த்தகர் சங்கம் இணை ஏற்பாட்டில்  நடைபெற்ற தீபாவளி கர்னிவல்   நிகழ்வில்  சேலை அழகு ராணி போட்டி நடை பெற்றது. 

இப்போட்டியில் இறுதி  சுற்றுக்கு தேர்வான ஏழு போட்டியாளர்களில் முதல் பரிசை தனியார் மருத்துவமனை ஒன்றின் தாதியான குமாரி ஹேமதர்ஷினி  வெற்றி பெற்றார். இப்போட்டியில்  இரண்டாவதாக லக்ஷினியும், மூன்றா வதாக புவனாவும் தேர்வு பெற்றனர். கடந்த 26  ஆண்டுகாலமாக  ஈப்போ  லிட்டில் இந்தியா வளாகத்தில் தீபாவளி விற்பனை சந்தை, தீபாவளி கலை பண்பாட்டு விழா நடத்தப்படுகிறது.   

இந்நிகழ்வில்  தீபாவளி  சேலை அழகு ராணி போட்டி முக்கிய  அங்கமாக நடைபெறும். இந்த ஆண்டு மலர்   மணப் பெண் அலங்கார  நிறுவனத்தின் இயக்குநர் மாயா  மலர் ஒருங்கிணைப்பாளராக  இருந்து இந்நிகழ்வை சிறப்பாக வழி நடத்தினார்.  

வெற்றி பெற்றவர்களுக்கு  ஈப்போ  லிட்டில் இந்தியா வர்த்தக சங்கத்தின்  தலைவி திருமதி  கலா பாலசுப்பி ரமணியம் புவான் ஸ்ரீ ராதா ராஜூ பரிசுகளை எடுத்து வழங்கினார். ஈப்போ பாராட்  மகளிர்  தலைவி   லட்சுமியும் கலந்து கொண்டார். 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அன்வாரை நலம் விசாரித்தார் பிரதமர் நஜீப்

தோள்பட்டையில் ஏற்பட்ட கடுமையான வலியினால்

மேலும்
img
டி.மோகன் நேற்று அதிகாரப்பூர்வமாக செனட்டர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

இந்த பதவி உறுதிமொழி நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர்

மேலும்
img
கூட்டரசுப் பிரதேச அமைச்சும், டிபிகேஎல்லும் மக்களைப் பந்தாடுகின்றன

இப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்

மேலும்
img
வங்கி அனுமதியின்றி காரை குத்தகைக்கு விடும் உரிமையாளருக்கு அபராதம், சிறை

வங்கிக் கடனைத் தொடர்ந்து செலுத்துவதற்காக,

மேலும்
img
மண்ணின் மைந்தர்களின் படைப்புகளை திரையரங்குகளில் ஓரங்கட்டுவது ஏன்?

ஜாங்கிரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் நந்தினி 

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img