வெள்ளி 19, ஜனவரி 2018  
img
img

14ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயா கை நழுவும்
வெள்ளி 20 அக்டோபர் 2017 13:11:22

img

வரும் 14-ஆவது பொதுத்தேர்தலில் புத்ராஜெயாவை தேசிய முன்னணி தக்கவைத்துக்கொள்ள இயலாமல் போகலாம். சொற்ப பெரும்பான்மையைப் பெறுவதற்கு தேவைப்படும் மொத்த எண்ணிக்கையில் அக்கூட்டணிக்கு இன்னும் போதுமான பாது காப்பான தொகுதிகள் கைவசம் இல்லை என்பதே இதற்கு காரணமாகும் என்று அரசியல் விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார். தேர்தல்களில் தேசிய முன்னணி தொடர் வெற்றிகளை குவித்திருந்தாலும், நடப்பில் உள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 100 தொகுதிகளை மட்டுமே தேசிய முன்னணிக்கு பாதுகாப்பான தொகுதிகள் என்று குறிப்பிட முடியும் என்று மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மார்சுக்கி முகமட் கருத்துரைத்தார்.

எஞ்சியுள்ள தொகுதிகளையும் பாதுகாப்பானவையாக மாற்றுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் ஒழிய, இப்போது பொதுத்தேர்தலை நடத்துவது அவருக்கு சற்று ஆபத்தானது என்று அவர் மேலும் கூறினார். ஓர் ஆய்வில் அவர் இத்தகவலை வெளி யிட்டுள்ளார்.

உண்மை நிலவரத்தின் அடிப்படையில் பார்த்தால், தீபகற்பத்தில் உள்ள 165 நாடாளுமன்றத் தொகுதிகளில் 57-ஐ மட்டுமே அம்னோ நிச்சயமாக வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. அத்தொகுதிகளில்,  70 இடங்கள் 70 விழுக்காட்டிற்கும் மேலான மலாய் வாக்காளர்களை கொண்டுள்ள மலாய் பெரும்பான்மை தொகுதிகள் என்றாலும் தேசிய முன்னணியை பொறுத்த வரையில் இதுதான் உண்மை நிலை.

Read More: Malaysia Nanban News Paper on 20.10.2017 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முக்காடு போடாமல் இருந்த தாக கூறப்படும் பெண்ணை ஓர் ஆடவர் அறையும் வீடியோ காட்சி

கருப்பு நிற உடை அணிந்திருந்த அந்த பெண், அந்த ஆடவரை

மேலும்
img
நாற்காலியை தூக்கி எறிந்ததில் சிறுவன் சதீஷ் மரணித்த விவகராம்

பந்தாய் டாலாம், ஸ்ரீ பந்தாய் பிபிஆர் 102 வீடமைப்புப் பகுதியில்

மேலும்
img
நாசி லெமா விற்பதற்கா பட்டதாரிகள்?

முறையான வருமானம் இல்லாத சுமையை

மேலும்
img
தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்கள் நல்லதொரு சூழலில், சௌகரியமாக மேற்கண்ட பள்ளிகளை

மேலும்
img
மலாயாவிற்காக தங்கள் உயிரை கொடுத்து போராடியவர்கள் மலாய்க்காரர்கள் மட்டுமா? 

நாட்டிற்காக ஓர் இனம் மட்டுமே போராடியிருப்பதாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img