வெள்ளி 19, ஜனவரி 2018  
img
img

நெருக்குதலுக்கு அடிபணியேன்.  டான்ஸ்ரீ சுல்கிப்ளி 
வெள்ளி 20 அக்டோபர் 2017 13:02:10

img

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ சுல்கிப்ளி அஹ்மட் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும், ஒரு திருமணமான  பெண்ணுடனான அவரின் கள்ளத் தொடர்பு குறித்த புல னாய்வுகளை கண்காணிக்கும் பொருட்டு சட்டத்துறை தலைவர் அலுவலகம் சிறப்பு பணிப்படையை உரு வாக்கியுள்ளது.

சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி நேற்று இதனைத் தெரிவித்தார். அக்கள்ள உறவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக சுல்கிப்ளி விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று போலீசார் இவ்வார தொடக்கத்தில் கூறியிருந்தனர்.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் முக்கியப் புள்ளியான அவர் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்த ளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு மிகவும் பரபரப்பான ஒரு சூழலை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர் மீதான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

சுல்கிப்ளிக்கு எதிரான இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்தும் பத்திரிகையாளர்களிடமி ருந்தும் ஏராளமான கேள்விகள் தனக்கு கிடைத்திருப்பதாகவும் இதன் எவ்வளவு கடுமையானது என்பதை கவ னத்தில் கொண்டு, இது தொடர்பான விசாரணையை தீவிரமாகக் கண்காணிக்கும் பொருட்டு கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி பணிப்படையை தாங்கள் அமைத்திருப்பதாகவும் அபாண்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

Read More: Malaysia Nanban News Paper on 20.10.2017 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முக்காடு போடாமல் இருந்த தாக கூறப்படும் பெண்ணை ஓர் ஆடவர் அறையும் வீடியோ காட்சி

கருப்பு நிற உடை அணிந்திருந்த அந்த பெண், அந்த ஆடவரை

மேலும்
img
நாற்காலியை தூக்கி எறிந்ததில் சிறுவன் சதீஷ் மரணித்த விவகராம்

பந்தாய் டாலாம், ஸ்ரீ பந்தாய் பிபிஆர் 102 வீடமைப்புப் பகுதியில்

மேலும்
img
நாசி லெமா விற்பதற்கா பட்டதாரிகள்?

முறையான வருமானம் இல்லாத சுமையை

மேலும்
img
தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்கள் நல்லதொரு சூழலில், சௌகரியமாக மேற்கண்ட பள்ளிகளை

மேலும்
img
மலாயாவிற்காக தங்கள் உயிரை கொடுத்து போராடியவர்கள் மலாய்க்காரர்கள் மட்டுமா? 

நாட்டிற்காக ஓர் இனம் மட்டுமே போராடியிருப்பதாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img