திங்கள் 15, அக்டோபர் 2018  
img
img

முன்னாள் அமைச்சர் ஷாபி அப்டால் கைது.
வெள்ளி 20 அக்டோபர் 2017 12:52:31

img

கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் நேற்றிரவு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) கைது செய்யப்பட்டார். அவர், சபா வாரிசான் கட்சியின் தலைவருமாவார்.

கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட வெ.150 கோடி கையாடப்பட்டதன் விசாரணை தொடர்பாக நேற்றிரவு 9 மணிக்கு அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்பு, சுமார் ஐந்து மணி நேரம் இங்குள்ள எம்.ஏ.சி.சி. அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை காலையில் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு, பிறகு அவர் தடுத்து வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஏ.சி.சி. துணைத் தலைமை ஆணையர் டத்தோ அஸ்மி பாக்கி இத்தகவலை உறுதி செய்துள்ளார்.

இதற்கு முன்பு, ஷாபி அப்டால் தனது வழக்கறிஞர்களுடன் நேற்று மாலை 5.15 மணிக்கு எம்.ஏ.சி.சி. அலுவலகம் வந்தடைந்தார். ஷாபியின் மனைவி டத்தின்ஸ்ரீ ஷுர்யானி ஷுவாய்ப், இவ்விசாரணை தொடர்பாக கைதான முதல் நபரான வாரிசான் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ பீட்டர் அந்தோணி ஆகியோர் உடனிருந்தனர்.

Read More: Malaysia Nanban News Paper on 20.10.2017 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அன்வாருக்கு இன்று பலப்பரீட்சை

தமது பி.கே.ஆர். கட்சியின் வாயிலாக

மேலும்
img
டோல் கட்டணம் ரத்தா? சாத்தியமில்லை

நெடுஞ்சாலைகள் சாத்தியமல்ல

மேலும்
img
மண்வாரி இயந்திரம் கவிழ்ந்து ஓட்டுநர் சூரியவர்மன் பலி.

சுங்கைத் திங்கி தோட்டத்தில் நண்பகல்

மேலும்
img
சிறுபள்ளிகள் இணைக்கப் பட்டால் பேராவில் பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் அபாயம்

பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்படக் கூடிய

மேலும்
img
செடிக் தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து என்.எஸ்.இராஜேந்திரன் பணி ஓய்வு

கடந்த 6 1/2 ஆண்டுகளாக பிரதமர் துறையில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img