செவ்வாய் 23, ஏப்ரல் 2019  
img
img

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு
சனி 14 அக்டோபர் 2017 18:18:38

img

ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்,  ஹார்வி வெய்ன்ஸ்டீன். ஆஸ்கார் விருது வென்ற படங்களைத் தயாரித்த இவர்மீது பல நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 

ஹார்வி வெய்ன்ஸ்டீன், ஒரு இளம் மாடலை பாலியல் ரீதியாகத் தனது ஹோட்டல் அறைக்கு அழைக்கும் ஆடியோ ஒன்று வெளியானது, ஹாலி வுட்டில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதன் பின்னர், நடிகைகள் சிலர் தாங்களும் இதே போன்று  ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாதிக்கபட்டதாகத் தெரிவித்தனர். 

அந்த வரிசையில், ஹாலிவுட் பிரபல நடிகைகளான பால்ட்ரோ மற்றும் ஏஞ்சலினா ஜூலி  ஆகியோரும் அவர் மீது அதே குற்றச்சாட்டை வைத்துள்ளனர். பிரபல அமெரிக்க நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர்கள் இதைத் தெரிவித்தனர். பால்ட்ரோ, ’எனது 22 வயத்தில் வெய்ன்ஸ்டீன் தயாரித்த படத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, தனது ஹோட்டலுக்கு என்னை அழைத்தார். எல்லா நடிகைகளிடமும் அவர் அப்படித்தான் நடந்துகொள்வார்” என்றார்.

இதுகுறித்து அவர் தனது அப்போதைய காதலனும் பிரபல ஹாலிவுட் நடிகருமான பிராட் பிட்டிடம் கூறியாதாகவும், அவர் வெயின்ஸ்டெயினைக் கண்டித்த பிறகு, நடந்ததை வேறு யாரிடமும் கூறக்கூடாது என அவர் மிரட்டியதாகவும் தெரிவித்தார். 

அதேபோன்று, பிரபல நடிகை ஏஞ்சலினா ஜூலி இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். “எனது இளமைக் காலத்தில், ஹார்வே வெயின்ஸ்டெயினிடம் மோசமான அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். அதனால், அவருடன் சேர்ந்து மீண்டும் வேலை செய்யவில்லை. அவருடன் பணியாற்றும் நடிகை களையும் எச்சரிக்கை செய்திருக்கிறேன். பெண்களிடம் இதுபோன்ற செயல்கள் எந்தத் துறையாக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் ஏற்றுகொள்ள முடியாது” எனத் தெரிவித்தார். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
அமெரிக்க மாநிலங்களை  புயல் தாக்கியது - 4 பேர் பலி

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான

மேலும்
img
நாட்டுக்கு பயன்படாத அமைச்சர்கள்  நீக்கப்படுவர் - இம்ரான்கான் அதிரடி 

படிப்படியாக கட்சியை வளர்த்து, 22 ஆண்டுகளுக்கு

மேலும்
img
மத்திய கிழக்கில் முதலாவது இந்து கோவில் அபுதாபியில் கட்டுமான பணிகள் தொடக்கம்

அடிக்கல் நாட்டு விழா அபுதாபியில்

மேலும்
img
சக்திவாய்ந்த புதிய ஆயுதத்தை சோதித்த வடகொரியா

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களில்

மேலும்
img
அமெரிக்காவில் சிறுமி பலாத்காரம் இந்தியருக்கு வாழ்நாள் சிறை 

எப்.பி.ஐ. ஏஜெண்ட் தன்னை ஒரு சிறுமி

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img