வெள்ளி 19, ஜனவரி 2018  
img
img

டெங்கு ஒழிப்புக்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்': முதல்வர்
சனி 14 அக்டோபர் 2017 18:10:02

img

கடந்த சில மாதங்களாக தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் டெங்கு பிரச்னை குறித்தும் அதுகுறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

விழாவில் பேசிய முதல்வர், 'டெங்கு கொசு ஒழிப்பில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். டெங்கு விஷயத்தை சவாலாக எடுத்துக்கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. எதிக்கட்சியினர் டெங்கு விஷயத்தையும் அரசியலாக்கி வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து அயராது உழைத்து வருகின்றனர்' என்று உரையாற்றினார்.

இந்த விழாவில், முன்னர் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, 'அ.தி.மு.க இருக்கும் வரை தமிழகத்தில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் கலைத் துறையினர் சிலர் வெற்றிடம் இருப்பதாகவும் அதனால், அரசியலுக்கு வந்துவிடலாம் என்றும் நினைக்கின்றனர். அவர்களின் கனவு நிறைவேறாது. எம்.ஜி.ஆர் ஒன்றும் கலைத் துறையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்று பேசினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழகமே தமிழகமே.. "மாய வலை"யிலிருந்து உனக்கு எப்போது விடுதலை?

இந்த சினிமாக்காரர்களின் படையெடுப்பு தமிழ்நாட்டுக்குப் புதிதில்லைதான்.

மேலும்
img
எம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளை அதிகம் கொண்டாடியதில்லை.

அந்த நாள் அவருக்கு பரவசமான நாளாகவும் இருந்ததில்லை

மேலும்
img
கோட்டையில் காவி கொடி: பாஜகவின் "ஆபரேஷன் ரஜினி" வியூகம்... சாகசமா? சர்க்கஸ் காட்சியா?

தமிழக முன்னேற்ற முன்னணி என தமிழ்த் தேசியராக

மேலும்
img
போகி புகையால் சென்னையில் விமான சேவை கடும் பாதிப்பு: 12 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

அதிகாலையில் பழைய பொருட்களை ஆங்காங்கே சேகரித்து

மேலும்
img
இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி நியமிக்கப்பட்டுள்ளார். 

அப்பதவியில் தொடர்ந்து மூன்றாண்டுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img