திங்கள் 23, அக்டோபர் 2017  
img
img

எம்.ஏ.சி.சி.கழுகுப் பார்வையில் சிக்காமல் இருந்தால் மட்டுமே ம.இ.கா.வேட்பாளராக நிறுத்தப்படுவது உறுதியாகும்.
திங்கள் 02 அக்டோபர் 2017 12:22:31

img

வரும் 14-ஆவது பொதுத் தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்யப்படவிருக்கும் ம.இ.கா. வேட்பாளர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) கழுகுப் பார்வையில் சிக்காமல் இருந்தால் மட்டுமே வேட்பாளராக நிறுத்தப்படுவது உறுதியாகும்.

பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை தாங்கள் பரிசீலனை செய்யவிருப்பதாக எம்.ஏ.சி.சி அண்மையில் அறிவித்திருந்தது. தேசிய முன்னணி இதற்கு ஒப்புக் கொண்டுள்ள நிலையில் ம.இ.கா.வும் அவ்வாறே அதன் பட்டியலை எம்.ஏ.சி.சி.யின் பார்வைக்கு சமர்ப்பிக்கும் என்று கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறினார். 

தங்களின் வேட்பாளர் பட்டியலை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் ம.இ.கா வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள டாக்டர் சுப்பிரமணியம், இப்பட்டியலை பிரதமர் அங்கீகரித்த பிறகு அது பரிசீலனைக்காக எம்.ஏ.சி.சி-யிடம் சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

ம.இ.கா. போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட  வேட்பாளர்களின் பெயர்களை ம.இ.கா. முன்மொழிந்துள்ளது. யார் சரியான வேட்பாளர் என்பதை பிரதமர் தேர்வு செய்வார். இளைய வாக்காளர்களை கவரும் வகையில் அதிகமான புதிய வேட்பாளர்களை பட்டியலில் இணைத்தி ருப்பதாக டாக்டர் சுப்பிரமணியம் சுட்டிக்காட்டினார்.

Read more: MALAYSIA NANBAN NEWSPAPER on 2.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முஸ்லிம் அல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் முடிவெட்டிக் கொள்ளக் கூடாதா?

டாக்டர் தான் சுவான் ஹோங்

மேலும்
img
ஷாபி  கைது:  வாரிசான் கட்சியை  முடக்கும் நோக்கமா? 

முன்னாள் புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை

மேலும்
img
மலேசியாவிற்கு  ஜி.எஸ்.டி.  வரி தேவயில்லை.

அதனை தாராளமாக அகற்றலாம்

மேலும்
img
2018-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கள் பள்ளிகளுக்குத் தேவையான ஒதுக்கீடு வழங்கப்படுமா?

பள்ளிகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப் பட்டதைத் தொடர்ந்து

மேலும்
img
ஈப்போ லிட்டில் இந்தியா சேலை அழகு ராணியாக ஹேமதர்ஷினி தேர்வு

வெற்றி பெற்றவர்களுக்கு ஈப்போ லிட்டில் இந்தியா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img