img
img

இந்த அமைச்சர் யார்? எங்களின் விசாரணைகளை கட்டுப்படுத்துவதற்கு இவர் யார்?"
சனி 30 செப்டம்பர் 2017 13:31:33

img

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி)  நடவடிக்கைகளை  கண்காணிக்க தேசிய  உயர் நெறி, நிர்வாக  கண்காணிப்பு இலாகாவை  உருவாக்க பரிந்துரை செய்துள்ள பிரதமர் துறை அமைச்சர் டத்தோ பால் லோவை எம்ஏசிசியின்  தலைமை  ஆணையர்  டான் ஸ்ரீ  ஸூல்கிப்ளி அகமட் நேற்று கடுமையாக சாடினார். 

எஸ்பிஆர்எம் தனது  தளவாடங்களையும்  ஆள்பலத்தையும் அதிகரித்துக் கொள்ளவும் அதன்  ஊழியர்களின் நலனை  பேணவும் அந்த  ஆணையத்திற்கு கூடுதல்  நிதி  ஒதுக்கீடு செய்யப்பட  வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சர் கேட்டுக் கொள்ள வேண்டுமே தவிர   புதிய  ஏஜென்சியை அமைப்பது பற்றி அல்ல என்று ஸுல்கிப்ளி தெரிவித்தார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் லஞ்ச, ஊழல் விவகாரங்களை விசாரிப்பதற்கும் ஆக்கப்பூர்வமான முறையில் குற்றச்சாட்டுகளைக் கொண்டு வருவதற்கும் அதனை கண்காணிக்க தேசிய உயர்நெறி நிர்வாக கண்காணிப்பு இலாகா ஒன்று அமைக்கப்படும் என்று அமைச்சர் லோ கூறியிருப்பதை ஸுல்கிப்ளி கடுமையாக சாடினார்.

இந்த அமைச்சர் யார்? எங்களின் விசாரணைகளை கட்டுப்படுத்துவதற்கு  இவர் யார்?" என்று ஸுல்கிப்ளி சம்பந்தப்பட்ட அமைச்சரவையில் வெளுத்து வாங்கினார். நாங்கள் எப்போதுமே சுந்திரமாக செயல்பட விரும்புகிறோம். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை கண்காணிப்பதற்காகத்தான் இந்த உயர்நெறி இலாகா அமைக்கப்படுகிறது என்று காரணம் கூறப்படுமானால் எங்களின் வழக்குகளை அவர்களிடம் எதற்காக நாங்கள் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அனைத்து இலாகாக்கள் மற்றும் ஏஜென்சிகளின் நிதி ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டு வரும் வேளையில் இப்படியோரு புதிய ஏஜென்சியை அமைப்ப தற்கான அவசரமும் அவசியமும் ஏன் ஏற்பட்டது என்று ஸுல்கிப்ளி கேள்வி எழுப்பினார். இந்த உயர்நெறி இலாகாவை அமைப்பதற்கு மட்டும் பணம் எப்படி வந்தது என்று அவர் வினவினார்.

Read More: Malaysia Nanban News Paper on 30.9.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடுதல் காலம் தேவை.

அந்த வாக்குறுதிகள் நிறை வேற்றப் படுவதற்கு 100 நாட்கள்

மேலும்
img
நாடற்றவர்கள் பிரச்சினையைத் தீர்க்க ‘செடிக்’ உதவும்

நாடற்றவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதற்கான

மேலும்
img
இந்துக்களின் நலன் காக்க புதிய சட்டம்.

அந்த சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல்

மேலும்
img
ஒற்றுமையையும் தேசப்பற்றையும் இளையோர் மனதில் விதையுங்கள்.

பல போராட்டங்கள், முயற்சிகளுக்கு

மேலும்
img
கட்டுப்பாடு இல்லாவிடில் ஆட்சி கவிழலாம். துன் மகாதீர் எச்சரிக்கை

வாரிசான் சபா கட்சி எம்.பி.களுக்கும் பிரதமர் துன் டாக்டர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img